மொழி பெயர்பாளர் – ஜெ. சீத்தாராம் உபாத்தியா
வெளியிட்டாளர் --- பூ.து. மாசிலாமணி முதலியார்
பதிக்கப்பட்ட அச்சுக்கூடம் – சுந்தர விலாஸ் அச்சுக்கூடம்
பதிப்பிக்கப்பட்ட வருடம் - 1913
--- நூல்முகம் --
தருமம், அதர்மம், காமம், மோட்சம் அடைய ஆக்கையன்றி (உடல்) வேறு விதங்
கிடையாது. “ தர்மார்த்த காம மோட்சனாம், சரீரம் சாதனம் யத்தணன் “ என்றால் மேற்கூறிய
நான்கு வித புருஷார்த்தங்களை அடைய தேக
வாயிலாக அல்லது வேறு விதத்தில் காணோம். வேறுவிதம் உளதென்று சுருதி சாஸ்திர, புராண, இதிகாசங்களில் தபோதனர்களால்
சொல்லப்படவில்லை. அனுபவமுங்கானோம். சகல காரியங்களும் தேக வாயிலாக வே நடந்தேறி
வருகிறது. அல்லாது ஆக்கையின்றிக் காணோம். சரிகை, கிரிகை, யோகம், ஞானம், என்ற
சாதனங்களும் தேகத்தின் வாயிலாக அன்றி வேருவிதங் கிடையாது. சத்தியவான் என்றும்
ரிஷிசிரேஷ்டர் என்றும், மகான் என்றும் தபோதனன் என்றும், துன்மார்க்கன் என்றும்
பாவி என்றும், நான் என்றும், நீ என்றும், அவன் என்றும் இன்னும் அளவிடக் கூஒடாத
நாமங்களினால் (பெயர்கள்) ஆக்கையை (உடலை) பார்த்து அழைக்கின்றோம். அல்லது சரீரம்
இல்லாமல் கிடையாது.
ஆத்மா, சிவன், மனது, புத்தி, சித்தம், பிராணன், முதலியவைகளை யாராவது தனித்துப் பார்த்தவர்கள்
கிடையாது. சகலமும் தேகவாயிலாக உண்டானது. என நிச்சயப்படுகிரார்கள். ஆகையால் சாதனங்களுக்கும் முக்கிய காரணமாகிய இத் தேகத்தைப் பற்றிய
இதனது வரலாறை அறிந்திருப்பது நன்மை என யாவருக்கும் புலன்படுகிறது.
தேகமானது சிருஷ்டி, திதி லயம் என்கிற மூன்று வித கருமங்களுக்கு
உடன் பாடாய் இருக்கின்றது. அதாவது பிறப்பு, வளர்ச்சி, தளர்ச்சி, என்ற
கருமங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டு திண்டாட்டப் படுகின்றது. தேகம் என்கிற பேர் எதுக்கு எனக் கருதிப் பார்த்தால் சகல உறுப்புகளும் ஒன்றாக கூடிய
உருவத்திற்கு சமுதாயப் பேராக விளங்குகின்றது.
ஏனெனில் பிரதி
உறுப்புகளும் வெவ்வேறு பேர்களால் அழைக்கப் படுகின்றது. தேகம் என்கிற பதத்திற்கு
அன்ன இரசத்தால் வளர்ச்சியுள்ளது எனப் பொருள் விளங்குகிறது. கைகால், சிரசு, மார்பு,
வயிறு, முதலிய வைகள் மற்றொரு வஸ்த்து (பொருள்) சேர்க்கையால் அல்லது சுதாவாக
(தானாக) போஷித்துக் கொள்ள சக்தியற்றவைகள். ஆகையால் இந்த உறுப்புகளின்
கூட்டத்திற்கு மாத்திரம் தேகமென்று அழைக்க முடியவில்லை சகல உறுப்புகளும்
சலனமில்லாமல் உண்ணவும், சீரணிக்கவும் முடியுமா! என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம்
வாயுவல்லாது செய்கைகள் முடியாது ஆகையால் தேகம் என்பது மாமிசம், உதிரம், கொழுப்பு, சல்லியம்
(எலும்பு) நரம்பு முதலியவைகளின் உறுப்புகளும் பிராணன்,
உதானன், சமானன், வியானான், அபானன், நாகன் கூர்மன்,
கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்று (கண்ணுக்கு) புலன் படாத வாயு
பேதங்களும் ஒன்றாக மிசிரப்பட்டதால், கலக்க பட்டதால் உண்டான சீவன், மனது, புத்தி
சித்தம் அகங்காராம் ஆத்மா என்பவைகளும் கூடியிருக்கும். இந்த சடலத்திற்கு பேராகும்.
வாயு பேதங்கள் நீங்கினும் அல்லது தேக உறுப்புகள் சிதிலப் பட்டாலும் இவ்விரண்டு
சமுச்சயங்களின் சேர்க்கையால் உண்டாகிய மனது முதலியவைகள் தென்படுவது இல்லை.
தேகவாயிலாகத் தானே சகலமும் கணிக்கப் பட்டு வருகின்றன.
ஆனால் சித்த புருசர்கள் இச்சடலத்தை விட்டு வேறு சடலம் புகுந்ததாகவும் நூல்கள்
புகலுகின்றன (சொல்லுகின்றன) அவர்கள் மாமிச வாயு சையோகத்தினால் (உடலுறவினால்)
உண்டானது மனோ, புத்தி, சித்தம், அகங்காரம், ஆத்மா
என்பவைகளை பிரத்தியோக தேகத்தை போல் ஒத்த தடிப்பான உருவமாக சுய அனுபோகத்தினால்
உண்டாக்கிக் கொண்டு இருக்கவேணும். மேலும் இப் பிரவிதப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
என்ற மகான் வாக்கியத்தை ஆலோசிக்கும் பொது சீவனுக்கும் சடலத்திற்கும் துவந்தம்
ஒன்றும் கிடையாது என வெளியாகின்றது.
இந்த இரகசியம்
சச்சிதானந்தா சொருபராகிய தட்ச்சினா மூர்த்தி பிரபுக்குதான் தெரியவரும். கேவலம் மாநிடனாகிய என் சிற்றறிவுக்கு பேரறிவு கோலம் புலப்படுமோ. நான்
எழுதிய கிரந்தம் வைத்திய நூல் ஆகையால் ஆக்கைக்குரிய குணா அனுபவங்களை சொல்ல வேண்டுமோ அல்லது வேறு விஷயத்தை சொல்லுவதில் என் நூலுக்கு பிரயோசனம்
கிடையாது ஆகையால் தேகத்தின் பொருளை எனக்கு தோன்றியவாறு எழுதலாயினேன். என் நண்பர்கள்
அதனை வாசித்து தாங்கள் கொண்ட தேவ பக்தி விசுவாசத்தை எங்கே கைவிடப் போகிறார்களோ
என்ற பயத்தினால் ஆத்மத்தைப் பற்றியும் சில சங்க்கைகள்
(விசயங்கள்) கூறி அந்த இரகசியம் கடவுளுக்கு அல்லாது நமக்கு புலப்படாது என
விவரித்துக் காட்டினேன்.
இது இருக்க தேகவாயிலாக
அல்லாது வேறுவித கருவி களினால் சாதனங்கள் கைகூடாது ஆகையால் இத் தேகத்தைக்
காப்பாற்றிக் கொள்வது யாவருக்கும் அவசியமானதாக இருக்கிறது அன்னரசாதி களினால் கால
பேதங்களினாலும் தேகங்ளின் உறுப்புகள் சிலது பெருகியும் சிலது சிதிலப்பட்டும் சிலது
வயசாஞ்சரத்திர்க்கு இடங் கொடுக்காமல் கட்டுப் பட்டு இருப்பதால் அப்பாதை
உண்டாகிறது. அவ் உபாதைகளுக்கு தான் வியாதி என்று பெயர். “
பூர்வ கண்மகிருதம் பாப்பம் வியாதி ரூபேனே பீட யேத்
“ நாம் முன் ஜென்மத்தில் செய்த வினைகளானவை இப் பிறப்பில் வியாதிகளாக அணுகி
நம்மை பீடிக்கின்றன என்ற பொருள் இந்த ஜென்மத்தில் இந்திரியங்களின் வித்தியாச
கருமங்களினால் கருமங்களினால் மாத்திரம் அல்லாது முன் ஜன்ம வினையுங் கூட அணுகி
இருக்க வேண்டியது என்று தெளிவாக தெரிய வருகிறது.
மானிட தேகம் உண்டான
பொழுதே புண்ணியம், பாவம் என இரண்டு வித கருமங்களும் உடைய தென்று பொருள்
விளங்குகின்றது. தேவனாக வேண்டுமானாலும் ஜன்மராகத்தியனாக ஆக வேண்டுமானாலும்
இராட்சதனாக ஆக வேண்டுமானாலும். நர (மனித) ஜென்மத்திலிருந்து தான் அவனது செய்கைவாறு
லாபிக்க வேண்டியிருக்கிறது.
தேவர்களோ புண்ணிய
சீலர்கள் ஜனன மரனாதிகள் இல்லாதவர்கள். இராட்சதர்களோ பாப ரூபிகள் ஒன்றும் கருதாமல்
கொல்லுவதே தொழிலாக கொண்டவர்கள். ஆகையால் இவ் இருதரத்தாருக்கும் தேகத்தின் கவலை
வேண்டியது இல்லை. தேவர்களானாலும் முமுஷத்துவம் பெற வேண்டுமானால் மானிட சடலத்தை எடுத்துத்தான் தீரவேண்டியது.
இராட்சதரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை
தேகத்தில் ஒரு பிணியும் இல்லாமல் இருந்தால் தான் நாம் செய்யும் சகல சாதனங்களும்
இடையூரின்றி கைகூடும். ஏதாவது பிணி இருக்குமானால் கருத்து நிலை பெறாமல் வியாதியின்
வசமாகி அவஸ்த்தைபட வேண்டியது வரும். நாம் கருதல் யாவற்றும் கைகூடாது.
ஆகையால் தான் கருணா
சீலராகியும் பரமேச்வரராகியும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாகிய பார்வதி
தேவியாரின் பிரான நாயகரும் சனகர்,சனத் குமாரர், முதலிய நிர்வானிகளுக்கு முமுஷத்துவ
நிலையைக் காட்டிய தட்சிணாமூர்த்தியானவர் சகல ஆன்ம
கோடிகளும் உஜ்ஜிவிக்கும் படியாக உலோக பரமாகி அவர்களின் மனத்தின்கண் நின்று சகலமான
வேத சாஸ்திரங்களை உண்டாக்கி இருக்கிறார்.
அவையாவன, சத்கருமங்கள்
அதாவது யோக, ஜபதபங்கள் செய்து நிர்வாண பதத்தைப்
பெற ருக்,யசுர், சாமம், அதர்வணம் என நான்கு
வேதங்களை பிரமதேவர் உண்டாக்கி அதின் வல்லமையாலே சிருஷ்டி,திதியத்தை நடத்தி
வருகின்றார். பிறகு பிரஜா விருத்தி அதிகரிப்பதினால் வேதாங்கம்,
வைசேஷிகம், பாட்டம், பிரபாகம், பூர்வவீக மீமாமிசம், உத்திர மீமாமிசம் (சிஷர, வியாகரணம், சந்தஸ்ஸு நிருத்தம், ஜோதிஷம்,
கல்பம், என்பவைகள் உண்டாக்கப்பட்டது.இன்னும் அநேக விதமான நூல்களும் எழுதப்பட்டன.
ஞானபரமாக உண்டாகிய
நான்கு வேதங்களுடன் பூலோகத்து சகல ஆண்ம கோடிகளும், உஜ்ஜீவிக்கும் படியாக ஆயுர்வேதம், அர்த்தவேதம், காந்தர்வ வேதம், தனுர்வேதம்,
என்கிற உபவேதங்கள் நாளும் உண்டாக்கப் பட்டன.
சத்திய யுகமாகிய கிருதயுகத்தில் ஆன்ம கோடிகள் சந்தியாவந்தராயும், ஞானவாங்கலாயும்,ரோகவான்களாயும்
காலசக்கிரத்தின் பாசத்தில் அகப்படாதவர்கலாயும், திரிலோக சஞ்சாரிகளாயும் ஜனன
மரணதிகள் அற்று அநேக ஆயிர வருஷங்களையும் மரணமின்றி பூமியில் உலாவிக் கொண்டு
இருந்தனர். ஆனால் இனி ஜன சங்கை அதிகரிப்பதினால் நெறி முதலியவை பிசகி பாவச் செயகைகளுக்கு
உடன்பட்டு வியாதியால் பீடிக்கப் படுவார்கள் என்று பஞ்சகிருத்தியங்களால் ஆன்ம கோடிகளை
பரிபாலித்து வரும் பார்வதி மனோ வல்லபர் ஒஷதிகளின் சேர்க்கையால் தேசத்திற்கு
கர்மத்தினால் லபித்த வியாதிகளைப் போக்கக் கூடும் என்று ஆயுர்
வேதத்தை அகிலாண்ட கோடி பிரமாண்டராகிய பார்வதி
தேவியாருக்கு அருளி செய்தார்.
முறையே வைகுண்ட நாதராகிய நாராயணரும் சிருஷ்டி கர்த்தராகிய
பரமேஷ்டியும் அவரவர்கள் பெடர்களால் பிரத்யோகமாக ஒவ்வொரு ஆயுர் வேதத்தை
பிர்சாதித்திருக்கிரார்கள். அந்த மூன்று கிரந்தங்களையும் ஆதாரமாகக் கொண்டு தேவ இராஜனான இந்திரன், தேவகுருவாகிய
பிரகஸ்பதி, அஷ்டதிக்கு பாளர்கள், பிரமரிஷிகள்,சித்தர்கள், சாரணர்கள், கண்ஹர்வர்கள், அசுவினி தேவர்கள்,தேவ வைத்தியராகிய தன்வந்திரி
பகவான், சூரிய பகவான், சந்திர பகவான் முதலிய தேவ பிரமுகர்கள் யாவரும்
அவரவர் பெயர்களால் பிரத்தியோக வைத்திய கிரந்தங்கள் எழுதி இருக்கிறார்கள்.
பார்வதி தேவியார் மகாலட்ச்சுமி தேவியார்,சரசவதி தேவியார் இன்னும் புகள் பெற்ற அப்சர மாதர்களும் இலேசாயும் சீக்கிரத்தில்
வியாதிகளின் குணத்தை அறிந்து தக்க வாறு சிகிச்சை செய்து சுவஸ்தப் படுத்தும் படியான
கிரந்தங்களை தாங்கள் தாங்கள் பெயர்களால் எழுதியிருக்கின்றார்கள். இவ்வளவு எழுத
வேண்டியதற்கு காரணம் யாது என யோசித்தால் தேகத்தின் உறுப்புக்கள் பலவிதமாக
இருக்கின்றன. உபாதைகளும் வெவ்வேராகத்தான் பாதிக்கின்றன. அதாவது கபால நோயின் உபாதை
ஒருவிதம், நேத்திர நோய்களின் குணத்தை அறிந்து செவ்வையாக தெரியப் படுத்தி
சிகிட்ச்சை எழுதுவது மிகவும் துர்பலமாயிருக்கும் ஆகையால் தான் சாஷாத் காரணாமான
பரமசிவமானது பலவித தொழில் நடத்தும் புண்ணிய தேகிகலான் தேவர்களின் உள்ளத்தில்
புகுந்து அவரவர்களின் செய்கைகளுக்கு தக்கவாறு உண்டாகும் வியாதிகளை சாங்கோபாவங்கமாக
எள்ளல வேணும் பிசகாமல் நோயின் குணத்தையும் அதற்கு தகுந்த சிகிச்சை களையும்
எழுதுப்படியாக கடாச்சித்தனர்.
ஏன் தேவர்கள் மாத்திரம் வைத்தய
கிரந்தத்தை எழுத வேண்டியது மற்ற பிராணிகள் முதலில் எழுதப் படாத என்று இதைக்
கண்ணோக்கும் யாவரும் பிரச்சனை செய்யலாம் ஆனால் தேவர்கள் தவத்தினாலும் யோகத்தினாலும்
வளர்ச்சி, பிறப்பு மரணம் என்பவைகள் அற்றவர்கள் காலச்சக்கிரத்தை பிரம தண்டத்தினால்
அடித்துத்தள்ளி சிரஞ்சீவிகளாக இருக்கிறார்கள். என்றைக்கும் அந்த லோகத்தில்
சந்தோசமே கொண்டாடபடும் அல்லாது வேறு வித பிணி மூப்பு முதலியவைகள் கிடையாது ஆகையால்
தான் அவர்களால் ஆன்ம கோடிகளின் உபாதைகள் நிவர்த்தி செய்து மருத்துவ நூல்கள் பலவகை
எழுதப்பட்டன.
சரகர், அத்திரி,பரத்வாஜர், அக்கினிவேசர், கொளசிகர்,
வசிஷ்டர், வேதவியாசர், அத்திரி, அகஸ்த்தியர், முதலிய தபோதனர்கள் தேவலோகத்திற்குச் சென்று
வைத்திய நூல்களை கற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்து அனேக ஆன்ம கோடிகள் நோய்களை
ஒளசத பிரயோகத்தினால் போக்கி நரலோக வாசிகள் இலேசாக அறியும்படிக்கு தேக நிதானம்
சூத்திரஷ்தானம் சிகிச்சா, என வியாஜித்து வேண்டிய கிரந்தங்கள் வடமொழியில்
எழுதியிருக்கிறார்கள்.
மகாதேவரது உத்திரவினால் வித்தியாசலத்தின்
கருவத்தை அடக்கி தேன் திசையில் தாம்பிரபரனிக்கு மகாநதி உற்பத்தி ஸ்தானத்தில்
நிவேசித்துக் கொண்டு திராவிட பாசைக்கு எழுத்துக்களை உண்டு பண்ணி சகல பாசைகளில்
மிகவும் மதுரமான பாசை என பேர் விளங்கும் படியாக தமிழ்
பாசை என்று நாம தேயமிட்டு விளங்கச் செய்து கும்பமுனி
என புகழ் பெர்ரோங்கும் அகத்திய மகாமுனிவராலும்
அவரது சிஷ்ய கனங்கலான சித்தர்களாலும் திராவிட பாசையில் சில வைத்திய கிரந்தங்கள்
எழுதப்பட்டு உலாவிக் கொண்டு இருக்கின்றன. அவைகளோ வேனில் வைத்தியத்தை மாத்திரம்
புகழாமல் சோதிடம், ஞானம், யோகம், இந்திரஜாலம் இன்னும் அநேக விசயங்கள் கூடிய கிரந்தங்களாக
இருகின்றன. சீக்கிரமாக அதனை அறிந்து சிகிச்சை செய்ய குறு அருளை பெற்ற
இரண்டொருத்தருக்கு கை கூடுகிறதல்லாது. வைத்தியம் கற்க வேண்டிய தென்றக்
கருத்துடையவர்களுக்கு எல்லாம் கை கூடவில்லை அப்படிக் கைகூடினவர்களோ பிணியாளிகளின்
உபாதையைத் தீர்ப்பது மிகவும் துற்பலமாய் இருக்கிறது. கனிஜபேதம் அதாவது செம்பு, இரும்பு,முதலிய
தாதுக்களின் ரூப குனபெதங்க்களை மாற்றி அவைகளை சுவர்ணமாக்கி
வாதத் தொழில் காலத்தை செலுத்தி விடுகிறார்கள். அது தப்பினால் இல்லற
வாழ்கையை ஒழித்து கானகத்திற்கு போயும் ஞான வான்களாயும் ஆகி விடுகிறார்கள்.
வைத்தியத்தைப் பற்றி மாத்திரம் விவரமாயும் தெளிவாயும் எழுதி இருந்தால்
இப்பொழுது பூலோக முழுவதும் உலாவிக் கொண்டிருக்கும் நோய்களின் உபாதைகள் நம்மை
இவ்வளவு வருத்தப் படுத்தாது ஆனால் அந்த மகான்கள் உலோக பிராந்தி வந்த சமயத்தில்
அபுரூபமான இரண்டொரு வைத்திய முறைகளை கடாசித்து விடுகிறார்கள் அம்முறைகளை கற்றுக்
கொண்ட புண்ணிய சீவனோ யாவருக்கும் தெரியும் படியாக பகிரங்கப் படுத்தாமல் தனக்குள்ளகத்தானே
அடைக்கலம் செய்து வைத்திருந்து அந்திய காலத்தில் நோயின் உபாதையால் தன நிலைதப்பி
இருப்பதால் இஷ்டம் இருந்தால் அருகாமையில் உள்ளவர்களுக்கு சரியாகாவாவது அல்லது
எக்கச்சிக்கமாகவாவது சொல்லி
விடுகிறார்கள். அல்லது காட்டாமலே மரணமடைகிறார்கள். இவ்விதமாக திராவிட வைத்திய நூல்களின் கதி உள்ளது.
ஆந்திர பாசை வைத்திய கிரந்தங்க்களோ எனில் தமிழ் கிரந்தங்களைப் போல்
தனி கிரந்தங்கள் காணோம். கீர்வான பாசையிலிருக்கும் வைத்திய கிரந்தந்ததின் மொழி
பெயர்பாய் இருகின்றன. கீரவான பாசையிலிருக்கும் வைத்திய கிரந்தங்களோ அனேகமாயிர
கிரந்தங்களிருக்கின்றன. அவைகள் யாவும் செய்யுட்களாக இருகின்றன. அந்த கீரவான பாசையை
பிராமணர்கள் தவிர மற்ற இதர ஜாதியார்கள் வாசிக்கவும் இதரர்களுக்கு சொல்லிக்
கொடுக்கவும் கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது.
வேதியரோ இதரஜாதியரை தொட்டால் தீட்டு வந்துவிடுகிறது பிராமனீயம்
கெட்டுப்போகிறது, என்று இப்பேர்ப்பட்ட ஆசரமுடையவர்களிடம் வைத்திய சாஸ்திரங்கள்
இருந்து யாது பிர்யோசனமாகிறது. வியாதியைக் கண்டறிய வேண்டுமானால் தேகத்தை
தரிசிப்பதும் அஸ்தத்தை (கையை) பிடித்து நாடியின் கதி அறிவதினாலும் வியாதியின்
சவிஷ்தாராம் கேள்விகளால் நோயாளி இடத்தில் இருந்து வார்த்தைகலாடி அறிந்து
கொள்கிறார்கள் அதனால் நோயாளியின் கூறு தெரியவரும் என்று வைத்திய சாஸ்திரத்தில்
சொல்லப்பட்டு இருக்கிறது.
இதரனைத் தொடுவதினால் தோசமுன்டாகும் என்ற இப்பிராமணர்கள் எவ்விதம் இந்த
வைத்தய நூல்களை வாசித்து அவைகளை அனுபவத்திற்கு கொண்டு வரத் துணிவார்கள். இந்த வித்தியாசங்கள் துவபரயுக அந்திய கால முதல் ஆசாரத்திற்கு
வந்ததாக தெரியவருகிறது. அஸ்திர சாஸ்திர வித்தைகள் முதலியவை பிராமணரும்
சத்திரியரும் ஆக இவ்விரு தரத்தார் அதிகமாக கையாடி வந்ததாக மகாபாரதம்
வசிப்பதினால் தெரியவருகிறது. துவாபரயுகம் அந்தியில் இம்மாதிரியான வித்தைகளை
பிராமணர்கள் கைவிட்டதாக தெரியவருகிறது.
கலியுக இரண்டாயிரம் வருசங்கள் கழிந்த பிறகு சமணமதத்தர்
இந்த இந்து தேசத்தை ஆண்டதாக தெரியவருகிறது. அம்ம்தஸ்தார் ஜாதி பேதங்கள் கிடையாது.
ஜீவ ஜெந்துக்களை கொல்லக் கூடாது என்ற கோட்பாட்டை உடையவர்கள் எங்கும் பாசையை
யாவரும் படித்து கல்விமான்களாக இருக்க வேண்டியது என்றதே கருத்து இம்மதஸ்தர்
வடநாட்டில் மாத்திரம் அல்லாது தென்னாட்டிலும் ஆண்டுவந்தார்கள். அவர்கள் காலத்தில்
கீரவான பாசையும் திராவிட பாசையாகிய தமிழும் மிகவும் சிறப்புற்று ஓங்கின அளவிட
முடியாத சன்மார்க்க புத்தகங்களும் வைத்திய கிரந்தங்களும் எழுதப்பட்டு இருக்கின்றன.
உதாரணமாக கீர்வானத்தில் நாம்
லிங்கானு சாசனம் என்ற நிகண்டும், அஷ்டாங்க ஹிருதயமும், மாதவ நிதானம் என்ற
வைத்திய கிரந்தங்களும் இன்னும் அநேக கிரந்தங்களும் இருக்கின்றன. தமிழில் நன்னூல், சிந்தாமணி,
நாலடியார் முதலிய நூல்கள் இருக்கின்றன.
சமண மதஸ்தர்கள் தங்களுடைய ஹிந்து சாஸ்திரங்களை இரகசியமாக இருப்பவைகளை
வெளிப் படுத்திவிடுகிறார்கள் என்ற எண்ணத்துடன் பிராமணர்கள்
ஆயுர்வேதம், அதர்வவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்
என்கிற உபவேதங்களுடன் நான்கு வேதங்களும் அறுபத்து நாலு வித்தைகள் அடங்கிய
சாஸ்திரங்களையும் வெளிப்படுத்தாமலும் தாங்கள் அப்பியாசிக்காமலும்
பாழாக்கிவிட்டார்கள். சில சஸ்திரங்க்களை சோமநாத மென்கிற பட்டணத்தில் பரமேஸ்வரன் தேவாஸ்தானத்தில் அடைக்கலமாக வைத்திருந்த
வைகளை மகமதியர்கள் அவைகளை கொளுத்தி லிங்கத்தினிடமாக இருக்கும் திரவியங்களையும்
கொள்ளையாடிக் கொண்டுப் போனதாக தேச சரித்திரத்தினால் தெரியவருகின்றது. இம்மாதிரியாக
தபோதனர்கள் கருணையால் அருளிசெய்த சாஸ்திரங்கள் அவ கோலமாயிற்று. கொல்லாத விரதத்தை
ஆரியர் யாவரும் கொண்டிருந்ததால் இம் மாதிரியான அவ கோலம் கிரந்தங்களுக்கு
வந்திருக்காது.
பூர்வ யுகங்களில் எங்கும் மந்திர தேவதைகளுடன் தனுர் வித்தையை
அப்பியாசித்துக் கொண்டு வந்ததாக புரனங்களினால் தெரிய வருகிறது. அந்த தனுர்வித்தையின் கதி இம்மாதிரி என்று யாரும் புகழுவார்
காணோம்.
ஆரியர்கள் இந்நாட்டில் குடி ஏறியபோது இந்நாட்டு
வாசிகளோடு யுத்தங்கள் அதிகமாக செய்து வந்தார்கள். கைகால் வெட்டுண்டும்
சிதிலப்பட்டு எலும்புகள் பிசகியும், உடைந்தும் நரம்புகள் அருந்தும் மாமிசங்கள்
அறுபட்டும் விரனங்களுடன் காயங்கள் முதலியவைகள் அதிகமாக ஜனங்களுக்கு சம்பவித்துக்
கொண்டு வந்தன அக்காலத்து மருத்துவரும் அப்போதுக்கப்போது திவ்யமான ஒஷதிகளினால்
ஜனங்களுக்கு உண்டாகிய காயங்களை ஆற்றி சவுக்கியப் படுத்தி வந்தனர்.
கேவலம் வானர வீரர்கள் ஸ்ரீ ராமபிரானுடன் இலங்கா தீவுக்கு படை எடுத்த
காலத்தில் தங்கள் இன வைத்தியர்களை ஓஷதி களுடன் தங்களுடன் கூட அழைத்துக் கொண்டு
போனதாக வால்மீக இராமாயண யுத்த காண்டத்தில் சொலப்படுகிறது. அரசர்கள் ஒருத்தருக்கு
கொருத்தர் நேரில் பாணப் பிரயோகம் செய்தபோது ஒருவர் தேகத்தை மற்றொருவர் சல்லடைக்
கண்களாக துளைத்து விட்டதாகவும் உடனே காயப்பட்டவர் ஒருவினாடிக் குள்ளாக ஒஷதிகளால்
சுவஸ்த்தப்படுத்திக் கொண்டு மீண்டும் யுத்தத்திற்கு வந்ததாகவும் புராணங்களில் எழுதப்பட்டு
யிருக்கின்றன.
அவ்விதமான சிறந்த சிகிச்சைகள் அடங்கிய வைத்திய கிரந்தங்கள் எங்கே
ஒளிந்து இருக்கின்றனவோ தெரியவில்லை. சல்லியங்கள் குறித்தும் நரம்புகளைக்
குறித்தும் விவரமாக காட்டி அதின் பின்னங்களை சேர்க்கவும் பொருத்தவும் தகுந்த
ஓஷ்திகளையும் விவரமாக காட்டும் மருத்துவ நோஒல் ஒன்று கூட காணோம். ஆனால் இவ்
விஷசயங்கள் சுஸ்ருதம் என்கிற ஒரு கிரந்தத்தில் மாத்திரம் தெரியக் காட்டி
இருக்கிறது. அக்கிரந்ததிலும் விவரமாக காட்ட வில்லை.
எட்டுவித பரிட்சைகளினால் தேகத்தின் வியாதிகளை அறியாலாம் என்று பிரதி
வைத்திய நூலாசிரியரும் தாங்கள் நூலில் எழுதி இருக்கின்றார்கள். நாடஈ சாஸ்திரத்தைப்
போல் விபரமாக மற்ற பரீட்சைகளை எழுத வில்லை வாதம், பித்தம்,
சிலேஷ்மம் அவைகளின் கூட்டு இவைகளின் கெடுதலினால் நானா வித வியாதிகள்
உண்டாகின்றன என்று நிதான காண்டத்தில் எழுதியிருக்கிறாகள். அல்லாது தேகத்தில் பலான
பாலான உறுப்புகளில் வாயு சஞ்சாரம் அதாவது இரத்தப் பரவல் சரியாக ஓடாததினாலும்
மட்டுப்பட்டதினாலும் அல்லது அதிகமாக இருப்பதினாலும் அவ்விடத்து மாமிசமோ நரம்போ
அல்லது எழும்போ கெட்டு அதினால் இந்த இந்த வியாதி உண்டானது என்று செவ்வையாக நமக்கு
போதமாகும் படியான வைத்திய சாஸ்திரம் ஒன்றுங் கூட காணோம். அம்மாதிரியான சாஸ்திரம்
பூர்வ காலத்தில் எழுதியிருந்ததா என யோசிக்கும் போது ஆதி காலத்தில் வைத்தய நூல்கள்
ஊர்த்துவாங்கு வியாதிகள் அதோகாய வியாதிகள், மத்திய தேக வியாதிகள் என நோய்களை
பிரித்து எழுதியிருந்த தாக தெரிய வருகின்றன.
மேல் கூறிய மாதிரி எழுதியதை யோசிக்கும் போது பிரதி உறுப்புகளில்
தோணும் வியாதியை விவரணமாக தெரியக் காட்டி அந்த பாகத்தின் மாமிசமோ கொழுப்போ, தோலோ,
நரம்போ, எழும்போ, எதோ ஒன்று கெடுதியால் இவ்வித வியாதி உண்டாயிருக்க வேண்டியது
என்று அதற்குதகுந்த அவிடத பிரயோகமோ, லேபனமோ அல்லது சாஸ்திர சிகிச்சையோ
சீக்கிரத்தில் சுவஸ்தமாகும் படியான முறையை சொல்லி இருக்க வேண்டியது.
அதினாலேதான் பூர்வகாலத்தில் ஆரியர்கள் வியாதிகளை ஒரு நிமிஷத்திற்குள்ளாக
போக்கிக் கொண்டு தாங்கள் தோழிகளை பார்த்து வந்தார்கள் தெய்வீக தன்மை பொருந்திய
அப்பேர்ப்பட்ட சாஷ்திரங்கள் ஜாதிகளின் கட்டுப்பாடுகள் அதிகரித்து தொடுதலினாலேயே
தோஷம் வந்து அணுகி நரகப் பிராப்தி உண்டாகும் என்று இதிகாசங்களின் சட்டங்களினாலும் மறைந்து
போயின அவைகள் இருக்கும் திசையில் கூட கண்டு பிடிக்க முடியவில்லை.
வியாதிகளின் குணங்களடங்கிய தேக நிதானமும் குனபாடம் அதாவது பதார்த்த குண சிந்தாமணி ஒஷதிகள்
தாதுக்கள், இரசவர்க்கங்கள் முதலிய வைகளில் சுத்தி மாறான கிராமம், அவிடதங்கள்
செய்யும் விதங்கள் அவிடத உபயோக கிரமம்முதலியவைகள் எழுதிய சாஷ்திரங்கள் மாத்திரம்
இருக்கின்றன தற்சமயம், பார்வதி தேவியார் சொல்லிய தேவீகல்பம்,
சிவபெருமானால் சொல்லப் பட்ட ஆயுர்வேதம், தன்வந்திரி
பகவான் செய்த சிந்தாமணி என்ற நூலும் அசுவினி தேவரால் செய்த வைத்திய கிரந்தமும்
சித்த வித்யாபூ என்பவரால் செய்த வைத்திய
கிரந்தமும் அஞ்சன நிதானம் என்கிற வைத்திய கிரந்தமும், சரகசம்ஹிதை, மாதவநிதானம்,
வாக்படம், சாரங்கதரசம்ஹிதை, பசுவராஜியம்,லோலாம்பா ராஜீயம், ஜீவரஷாமிர்தம் இன்னும் சில கிரந்தங்கள் மாத்திரம் கீரவான
பாசையில் தற்சமயம் அகப்படுகின்றன. இந்த கிரந்தங்கள் மாத்திரம் கீரவான பாசையில்
தற்சமயம் அகப்படுகின்றன. இந்த கிரந்தங்களில் சரகம் என்கிற கிரந்தம் சுமார் எட்டு
லட்சம் செய்யுட்கள் அடங்கியது.
அந்தக் கிரந்தம் தான் முதலில் பூலோகத்தில் எழுதப்பட்ட கிரந்தம்
மிகவும் விசால மான கிரந்தம் அக்கிரந்தத்தைப் பார்த்துதான் திராவிட பாசையில் அகத்தியம முனிவர் அநேக முறைகளை எழுதி இருக்கிறதாக
தென்படுகிறது. கும்பாமுனி தனது வைத்திய காவியம் என்ற கிரந்தத்தில் “ வேதியர் சொன்னதை
நான் சொன்னேனப்பா” என்று புகட்டியிருகிறார். அதில் தென்படாத ஒரு முறையும்
கிடையாது.ஆனால் அந்த தனி கிரந்தம் அகப்படுகிறது மிகவும் கஷ்டமா இருக்கிறது. அந்தக்
கிரந்தத்தை சம்சேஷம்மாக பரத்துவாஜ மகா ரிசியானவர் சரகசம்ஹிதை என்கிற பெயருடன் ஒரு கிரந்தம்
எழுதியிருக்கிறார்.அக்கிரந்தத்தை தான் சரகம் என வழங்குகின்றார்கள். இன்னும் அநேக
சிறிய வைத்திய கிரந்தங்கள் பல மருத்துவ பாஸ்கரர்களால் கீரவான பாசையில் எழுதப்பட்டு
இருக்கின்றன.
அக்கிரந்தங்களில் சிலது தேக நிதானத்தை மாத்திரம் சொல்லும் சிலது
சிகிச்சைகளை மாத்திரம் சொல்லும். சிலது கசாயங்களை மாத்திரம் எடுத்துக் காட்டும்,
சிலது ஓஷ்திகளுடையவும், தாதுக்களுடையவும் சுத்தி, மாறான முதலியவைகளை மாத்திரம்
அறிவிக்கும். சிலது அவிடதங்கள் செய்யும் விதங்களை மாத்திரம் கூறும். இவைகளின்
பெயர்கல்யாவையும் எழுதுவதினால் கிரந்தம் அதிகாரிக்கும் என்கிற கருத்தினால் எழுத
முடியவில்லை.
திராவிட பாசையில் மருத்துவ நூல்கள் எழுதிய நூலாசிரியர்கள் குறித்து
யாவருக்கும் தெரிந்த விஷயமாகையல் நான் அதை எழுதுவதினால் பிரயோஜனம் இல்லை.
தென்னாட்டில் இருக்கும் திராவிட வைத்தியர்கள் திராவிட பாசை யாவருக்கும் மருத்துவ
நூற்களில் சொல்லிய பிரகாரம் சிகிச்சை செய்து வருகிறார்கள். நான் முன்பாகத்தானே
திராவிட நூற்களின் விருத்தாந்தை சொல்லியே இருக்கிறேன். தேகநிதானம் தெரிவது
வியாதியின் பூர்வரூபம், தற்கால ரூபம் முதலியவைகள் செவ்வையாக அறிந்து கொண்டும்
சிகிச்சை செய்யும்படியாகச் சொல்லி இருக்கவில்லை. நோய்களின் பெயரை மாத்திரம் கூறி
அதின் இலட்சணங்களை (குறிகளை) காட்டாமல் சிகிசைகளை மாத்திரம் சொல்லி இருக்கின்றன.
அந்த சிகிச்சைகளில் கிராமமாக பிரதி நோயிக்கும் காசயம்,
சுரசம்,கலகம், சூரணம், லேகியம்,லேபம், தூபம்,
பசபம், சிந்தூரம், முதலியவைகளை கிரமாக சொல்லி இருக்கவில்லை. இராசவர்க்கம்
பாசான காரங்களின் பிரயோகங்களையோ முக்கிய மாக சொல்லி இருக்கிறது.
இந்த கலியுகத்தில் பிராண்ணானது சல்லியம்,
நரம்பு,மாமிசம் என்பவைகளைப் பற்றி இராமல் உதிரம், சருமம் இவைகளைப் பற்றி
இருக்கிறது. ஆகையால்தான் மனிதனது வாழ்நாள் மிகவும் குறைந்து வருகிறது. நாமும் தேக
சதியை அனுசரித்தே குரூரமான அவிடத பிரயோகங்கள் செய்ய முயலாமல் லேசான அவிடதங்களை
உபயோகிக்க வேண்டியிருகிறது. குரூர மருந்துகளில் சேவையால் சிலருக்கு வியாதியும்
தீராமல் நூதன வியாதிகளும் உண்டாகின்றன. இராசவர்க்க பாசனங்களின் சுத்திகளும் சரியாக
சொல்லப்படவில்லை. ஆகையால் கீரவான பாசையிலிருக்கு வைத்திய கிரந்தங்கள ஏது லிங்கம்
சிகிச்சை என முப்பெருளுக்கு உருத்தாக இருப்பதைக் குறித்து அவைகளை இலேசான
வார்த்தைகளினால் தமிழ்ப் படுத்தினால் மிகவும் உலோகோபகரமாய் இருக்கும், என்றும்
தமிழ் வைத்தியர் அவைகளையும் அறிந்து கொண்டு சிகிச்சை செய்ய ஆரம்பித்தால்
உலோகோபகராமாய் இருக்கும் என்று என் உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது.
தேவ அருளில்லாமல் மனித பிரயத்தித்னத்தினால் ஒன்றுங் கைகூடாதென மதித்து
ஸ்ரீமத் தஷ்சினாமூர்த்தி சுவாமிகளை அனுதினமும் இடை விடாது அவரை என் கருத்தைப் பூர்த்தி செய்யும் படிக்கு
தியானித்து வந்தேன் அந்த மகானுபவரோ “குருவே சர்வலோகரனாம்
பிவிஜோபவரோகினாம் நிதயே சர்வ வித்தியானாம் த்ஷனாமூர்த்தி
நமஹா “ சகலமான அண்டரண்ட சராசரங்களுக்கு ஆசருயர் மனதினால் சம்பவிக்கும்
வியாதிகளைப் போக்கும் வைத்தியர் சகல மான வித்தைகளுக்கு ஆலயம் போன்றவர்கள் ஆகையால்
தஷினாமூர்த்தியை நான் நமஸ் கரிக்கிறேன் என்று பொருள்.
அந்த மகாபிரபுவினது கடாஷ வீஷயத்தை முன்னிட்டு எழுதுவதும் கருதுவதும்
சொல்லுவதும் அவராகத்தானே பாவித்து எனது உடல் பொருள் ஆவி என்கிற மூன்று
கருனங்களையும் அவருக்கு தத்தம் செய்து இந்தக் சிறிய கிரந்தத்தை எழுதலாயினேன். இந்த
கிரந்தத்தை செய்யுட்களாக எழுதினாலும் இலஷ்சனமாக எழுதினாலும் படித்தவர்களுக்கு
அல்லல்படும். தற்காலத்தில் மருத்துவ பயிற்சியும் வைத்திய சிகாமனிகளோ யாவருக்கும்
பாசையை இலக்கண விதியாலாசித்த கல்விமான்களாக இருக்கவில்லை.
சிலர் கல்வி மான்களாயும் சிலர் பாசையை வாசிக்கவும் எழுதவும் தகுந்த
கல்வி ஞானத்தை உடையவர்களையும் இருக்கிறார்கள்
இலஷனத்தை நாடி எழுதினால் கல்வியில் சிறந்தவர்களுக்கு உபயோகப் படுமல்லாது
மற்ற என்போன்றவர்களுக்கு உபயோகமாகா. சிறியார்கள் சிறுமிகள் முதல் சகலரும் அறிந்து
சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது என்பது எனது கருத்து. ஆகையால்தான் இக் கிரந்தத்தை
வெகு சுலப நடையாக யாவரும் அறிந்து கொள்ளும் படியாக எழுதி இருக்கிறேன். மேலும் சகல
வைத்திய சாஸ்திரம் கற்றவனாக இருந்தும் ஹஸ்த ரேகை அதாவது கைராசி இல்லாமற் போனால்
நோயாளிகளின் வியாதிகளை சுவஸ்தப்படுத்த சக்தியற்றவனாகிறான்.
இவ்விசயம் யாவரும் அறிந்ததே இருக்கிறார்கள் பெரும்பான்மையாக
கல்விதிரமுடைய மருத்துவர்களில் கைராசி உடையவர்கள் கொஞ்சம் பேராக இருப்பார்கள்.
கல்வித்திறம் இல்லாத மருத்துவர்களில் அனேகருண்டு கைராசிப் பற்றிய விஷயம்
ஆதியிலிருந்தே வழங்கி வருகின்றது. எப்படி எனில் கைராசி பற்றிய விஷயம்
ஆதியிலிருந்தே வழங்கி வருகின்றது. எப்படியெனில் பாதாள உலோகாதிபதியாகிய
ஆதிசேடருக்கு வயிற்றுவலி உண்டாகி மிகவும் பீடித்துக் கொண்டு இருந்தது. ஆதிசேடரும்
உபத்திரவத்தைப் போருக்க முடியாமல் பூலோகத்தில் இருக்கும் வசிஷ்டரை வரவழைத்து
சிகிச்சை செய்யும் படியாக மிகவும் கேட்டுக் கொண்டார்.
வசிஷ்டரும் சாஸ்திரப்படி சிநதூரத்தை தயார் செய்து கொடுத்தார் அவ்
ஆவிடத சேவையால் வியாதியானது அதிகரித்துக் கொண்டே வந்ததல்லாது சுவஸ்தமாக வில்லை.
நோய் அதிகரித்துக் கொண்டே வந்ததல்லாது சுவஸ்த்தமாக வல்லை. நோய் அதிகரித்ததினால் தாளாமல்
தேவலோக வைத்தியராகிய தன்வந்திரி பகவானை சிகிச்சை செய்யும் படியாக மிகவும் வேண்டிக்
கொண்டார்.
தன்வந்திரி பகவானும் வசிஷ்ட்டர் செய்து கொடுத்த சிந்துரத்தை தானே அவர்
செய்தது போல் அதே முறையில் தயார் செய்து கொடுத்தார். அவ் அவிடத பிரயோகத்தினால்
நோயானது மூன்று நாட்களில் சுவஸ்தம் ஆகிவிட்டது.ஆகையால் மருத்துவன் ஹஸ்த்த ரேகை
உடையவனாகவும் இருக்கவேண்டியது அப்படி ஹஸ்த ரேகை இல்லாதவன் மருத்துவத் தொழிலுக்கு
பிரயோஜனப் படமாட்டான். என்று யாவராலும் மதிக்கப்படுகிறது. மேற் கூறிய காரணங்களை
அனுசரித்து இந்த சாஸ்திர மானது சுலப நடையாய் எழுதபடலாயிற்று.
இந்தக் கிரந்தமானது வடமொழி நூல்களில் இருந்து மொழி பெயர்த்து
எழுதியதாகையில் ஆங்காங்கு வட மொழி சொற்களையே உபயோகித்திருக்கிறது. நோய்களுக்கும்
அவிடதங்களுக்கும் வடமொழி பெயரை தானே எழுதியிருக்கிறது. சில இடங்களில்
மூலிகைகளுக்கு தமிழ் பெயர் அகப்படாத இடத்தில் அந்த பெயரையே எழுதி அதற்கு தெலுங்கு
பாசையில் வழங்கிற பெயரையும் எழுதி இருக்கிறேன்.
இந்தக் கிரந்தம் வடமொழி நூல்களில் இருந்து தமிழ் படுத்திய தாகையால்
இதில் அநேக எழுத்துப் பிழைகள், சொற் குற்றங்கள் இருக்கவும் அவைகளைப் பாராட்டாமல்
விஷயங்களை கவனிப்பீர்கள் என்று மிகவும் கோருகிறேன். நான் இந்த கிரந்தத்தை வசன
ரூபமாய் எழுத எனக்கு வேண்டிய விசயங்களை மாதவ நிதானம்,
அஷ்டாங்க ஹிருதயம், ஜீவரட்ஷாமிருதம், லோலம்பராஜ்ஜியம், சாரங்கதர சம்ஹிதை,
தன்வந்திரி பகவானால் செய்த சிந்தாமணி என்கிற நூல்
சரக சம்கிதை முதலிய நூல்களில் இருந்து தமிழ் படுத்தி எழுதியிருக்கிறேன்.
பிரதி முறையும் கிஞ்சிற்றேனும் என் சுதாவாக ஒன்றும் அதிகரிக்காமலும்
மாட்டுச் செய்யாமலும் அந்தந்தக் கிரந்தங்களில் இருக்கிறது போல் அவிடத முறைகளையும்
சுத்தி வகையறாக்களையும் ரோக குணங்களையும் தமிழ் படுத்தியிருப்பதால் வேண்டு
வோருக்கு அவைகளது மேற்கோளாகிய வட மொழி செய்யுளை அப்படியே எழுதி அனுப்ப சக்தி
உள்ளவனாக இருக்கிறேன் மேலும் வடமொழி அவிடதங்களின் பெயர்களுக்கு சரியான தாமல்
பெயர்களை அகப்பட்டவரையிலும் அகாராதி போல் எழுதி வைத்துக் கொள்ள எனக்கு வேண்டிய
கிரந்தங்களை உதவி செய்தும் தெரிந்த வைகளை வாய் மொழிகளினாலேயே கடாஷித்து இக்
கிரந்தத்தை நிர்விக்கின மின்றி அச்சிட்டு பிரசுரிக்கும் படிக்கு செய்தவரும் இச்
சென்னையில் ஆயுர்வேத சிகாமணிகளால் மதிக்கப்பட்டு மர்ரவாசிகளால் புகழப் பெற்று ஓங்கும்
ஆயுர்வேத பிரபாகர் ஸ்ரீமான் பாண்டேசுரம் கங்காதர தேவர்
அவர்களை சதா துதித்துக் கொண்டே இருக்கிறேன்.
ஆதியில் அகாராதி எழுதுவதில் அவரது சகாயமில்லாமல் நான் எழுதி வைத்துக்
கொள்ளாமல் இருந்தால் இந்தச் கிரந்தத்தை தமிழில் எழுத மிகவும் கஷ்டமாக இருக்கும்
ஆகையால் கிரந்தம் முழுதும் அவர் எழுதியதாக கணிக்கப்பட்ட வேண்டியதல்லாது நான்
எழுதியதாககாது. நான் சுமார் இருவது வருடங்களுக்கு முன்பாக சென்னை சுந்தர விலாசம்
யந்திரசாலையில் அச்சிட்டு இருக்கும் எட்டுக் காண்டங்கலடங்கிய அனுபோக வைத்திய பிரமரகசியம்
என்கிற நூலில் என் கருத்திற்கு இசைந்தாப்போல் கீரவான பாசையிளிருக்கும் வைத்திய
நூலைப் போல் சுரபிரகரணம் வரையிலும் அச்சிட்டு மூன்றாவது காண்டமாக சேர்த்தேன்.
அப்புறம் கிரமமாக மற்ற வியாதிகளின் குணங்களை கூறி சிகிச்சைகளை எழுதி
வெளிப்படுத்த எனக்கு அவகாசம் இல்லாத்தினால் அவர்கள் தங்களிடத்தில் அனுபோகமான
கைமுறைகளை சேகரித்து வைத்து இருந்தவ்வைகளை அச்சிட்டு எட்டுக் காண்டங்களாகி
கிரந்தத்தை வெளிப்படுத்தி விட்டார்கள் அப்புறம் நான் (அனுபவ
வைத்திய தேவரகசியம் என்ற பெயருடன் இந்தக் கிரந்தம் எழுதலாகினேன். எந்த
கிரந்தத்தைப் பார்த்து தமிழ் படுத்தினேனோ அந்தப் பெயர் இந்நூலுக்கு இடாமல் இப்பர்
இட்டதற்கு காரணம் யாதெனில் பொதுப் படையாக தேவ இரகசிய மென்றும் பெயரிட்டேன். தேவ ரகசியம்
என்றால் தேவர்களாகிய தபோதனர்கள் கையடிக் கொண்டு கூடமாக வைத்திருந்த முறைகள்
அடங்கிய கிரந்தம் என்று பேர் (பெயர்)
இக் கிரந்தம் எழுதும் போது எனக்கு வேண்டிய உதவி செய்த சதர்ன் மராட்டா
ரெயில்வே குட்ஸ் டிபார்ட் மென் கிளர்க்கு ஸ்ரீ மண் மாமிடி சாமலையா நாயுடுகாருகும்,
மலையாளம் கொச்சி சீமை தங்கச் சேரி அநேக சமஸ்தான பிரபுக்களால் வேண்டிய பரிசுப்
பெற்ற தென்னாடு முழுக்கவும் புகழ் பெற்றவருமான ஸ்ரீ மான் ஆசான் மந்திரம் காசீம்
பிள்ளை அவர்கள் மாநாகரும் 28
வது ரிஜிமெண்டு பன்சன் சஈபாய், ஸ்ரீமான் வேதாந்தம் கிருஷ்ணசாமி நாயுடு
அவர்களும் இவ் வைத்திய கிரந்தம் எழுதுவதில் எனக்கு உதவிய நன் முயற்சியைப் பற்றி
என்றைக்கும் நான் அவர்களை மறவாமல் இருக்கிறேன்.
எனது கருத்தின்படி அநேக கீரவான கிரந்தங்களை செகரித்து தமிழ் படுத்தி அச்சிட வேண்டிய தான சகாயஞ்
செய்து கிரந்தத்தை பூரணமாக சுவல்ப விலையில் விற்று பிரசுரஞ் செய்ய முயன்ற சுந்தர விலாஸ் அச்சுக்கூட சுந்தரம் ஸ்ரீமான் பூ.க. மாசிலாமணி
இன்னும் அநேக கிரந்தங்களின் பண்டிதர்களின் சகயத்தினால் அச்சிட்டு சுவல்ப விலையில்
பிரசுரப் படுத்தி புகழ் அடைவாரென்று நான் நம்புகிறேன். அணு பவ வைத்திய தேவரகசியம்
என்கிற கிரந்தத்தை மூன்று காண்டங்களாக பிரித்து இப் பூலோகத்தின் கண் உலாவிக்
கொண்டு இருக்கிற சகலமான வியாதிகளைப் விபரமாக எழுதி அவைகளை போக்க மூலிகை சரக்கு
இராச வர்க்க பாசனங்களின் சுத்தி மாறான மாசமா சிந்துராதிகள் செய்யும் விதத்தையும்
அவ் அவிடதங்கள் தயார் படுத்தி வியாதிகளுக்கு தகுந்தவாறு பிரயோகிக்கும்
விதங்களையும் விபரமாக எழுதி கிரந்தத்தை முடித்து இருக்கிறேன்.
முதற்காண்டத்தில் நாலாயிரத்தி தொண்ணுற்று எட்டு வியாதிகளையும் பதினாலு வர்க்கங்களாக
பிரித்து பிரதி வியாதியின் பூர்வகால தற்கால குணங்களையும் காட்டி நோய்களின்
சாத்தியா சாத்யங்கள் முதலியவைகள் கிராமமாக அறிந்து கொள்ளும்படியாக எழுதி
இருக்கிறேன் ஒரு நோயைக் கூட நான் விடவில்லை ஸ்திரி பாலரோக சிகிச்சை என்கிற பால
வாகடத்தை தமிழ்படுத்தி வியாதிகளின் தன்மையும் அவைகளுக்கு தக்கன கியாழம் சூரணம், லேகியம், பஸ்பம், சிந்தூரம் முதலிய
அவுடதங்களையும் எழுதி இக்காண்டத்தில் தானே சேர்த்து இருக்கிறேன்.
இராண்டாவது காண்டத்தில் பல கீரவான வைத்திய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற நாடி
சாஸ்திரத்தையும் வியாதிகளை நிர்ணயப்படுத்தி சாத்தியா சாத்தியாங்களைத் தெரிந்து
அவிடதங்கள் பிரயோகிக்க எட்டுவித பரீட்சைகளையும் மகாதேவர் பார்வதி தேவியாருக்கு
அருளிச் செய்த கால ஞானத்தில் வைத்தியருக்குரிய சில பாகமும் எழுதி இருக்கிறேன்
சாதரணமாக உபயோகிக்கும் ஒஷதிகளின் குணங்களையும் தெரியக் காட்டியிருக்கிறேன்.
மூசைகள், எந்திரங்கள் முதலியவை செய்யும் விதத்தையும் காட்டியிருக்கிறேன், தாது
ரசவர்க்கக் சுத்திகளில் பல நூலாசிரியருடைய வைகளை எழுதி இருக்கிறேன். முக்கியமாக
தன்வந்திரிபகவான் எழுதிய சுத்தி கிராமங்களை வழுவாமல் முற்றிலும் எழுதி
இருக்கிறேன்.
மூன்றவது காண்டத்தில் பிரதி வியாதிக்கும் கியாழங்கள், கலகங்கள் சூரணங்கள், கிருதங்கள்,
லேகியங்கள், லேகியங்கள், லேபனங்கள், தூபங்ககள் பஸ்பங்கள் சிந்தூரங்கள்
மாத்திரைகள். முதலியவைகள் செய்யும் வகையுடன் கிராமமாக காட்டி ஆங்காங்கு
எழுதியிருக்கிறேன். இம் முறைகளில் ஏதாவது சந்தேகம் நேரிட்டு தெரிவித்தால் உடனே
அதற்கு மேற்கோளை எழுதி அனுப்புவதுடன் சந்தேக நிவர்த்தி செய்யவும் எதில் பார்த்து
இருக்கிறேன்.
மூலிகைகளின் வடமொழி பெயரும் அதற்கு தென்னாட்டில் வழங்கும் தமிழ்
பெயரும் தெலுங்கு நாட்டில் வழங்குகிற தெலுங்கு பெயரும் இந்நூல் தனி பெயரும்.
அகப்படுகிற வரையிலும் இங்கிலிசு பாசையில் வழங்குகிற பெயரையும் தமிழ் பாசை
எழுத்துக்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன் அந்த அகராதி முடிந்தவுடன் நண்பரின்
சகாயத்தினால் அச்சிட்டு வெளிப் படுத்துவேன். இதைக் கண்ணோக்கும் நண்பர்கள் இந்த
அனுபவ வைத்திய தேவரகசியம் என்கிற கிரந்தத்தை தாங்கள் மாத்திரம் பிரதி கிரந்தம்
வரவழைத்து கொள்வதுடன் தங்கள் மித்திர பாந்தவர் களையும் வாங்கும் படிச் செய்து இனி
நான் தமிழ்படுத்த வேண்டிய பொருளுதவி செய்வீர்களேன்று மிகவும் வேண்டிக் கொள்கிறேன்
சர்வதயாபர மூர்த்தியாகிய ஸ்ரீ தஷிணா மூர்த்தி சுவாமிகள்
நம்மை யாவரையும் இரசித்து காத்த அருள அவரது பாதம் புஜங்களை இடைவிடாது தியானித்து
இக்கிரந்தத்தின் நூன் முகத்தை முடிக்கிறேன்.
இப்படிக்கு
ஜெ. சீதாராம் உபாத்தியா


No comments:
Post a Comment