| அனுபவ வைத்திய தேவரகசியம் முதற்காண்டம் ரோகங்களின் அட்டவணை- 1 | |
1. தோசதேகலட்சணம்
2. சரீரத்தத்துவ சங்கிரகம்
3. இரத்த விஷய விவரம்
4. ஜடராக்கினி விஷயம்
5. வாதாதி விவரம்
6. பித்த பிரகுருதி
7. சிலேத்தும பிரகிருதி
8. வாத பிரகிருதியின் தொழில்
9. பித்தத்தின் தொழில்
10. சிலேத்துமத்தின் தொழில்
11. சுரநிதானம்
12. ரோகங்கள் உண்டாவதற்கு காரணம்
13. காச்சலைப் பற்றியது
14. வாதசுர லட்சணம்
15. பித்த சுர லட்சணம்
16. சிலேத்தும சுர லட்சணம்
17. வாத சிலேத்தும சுரம்
18. பித்தசிலேத்துமா சுரம்
19. சந்நிபாத சுரம்
20. சந்நிபாத சுர பேதங்கள்
21. கண்ட குப்ஜசந்நிபாதம்
22. சந்திக சந்நிபாதம்
23. தாந்திரிக சந்நிபாதம்
24. புக்க நேத்திர சந்நிபாதம்
25. ருத்தாக சந்நிபாதம்
26. ஜிம்மாக சந்நிபாதம்
27. பிரலாப சந்நிபாதம்
28. அந்தக சந்நிபாதம்
29. ரத்திஷ்டி சந்நிபாதம்
30. சித்தவிப் பிரம சந்நிபாதம்
31. ------ங்க சந்நிபாதம்
32. கர்ணிக சந்நிபாதம்
33. அபிநியாச சந்நிபாதம்
34. சந்நிபாத சுரங்களின் வயது
35. தாகபூர்வபக சந்நிபாதசுர லட்சணம்
|
36. சீதபூர்வக சந்நிபாத சுரலட்சனம்
37. சுகசன்னி பாதம்
38. சப்த தோஷம்
39. அபத்திய தோஷம்
40. சங்க தோஷம்
41. விசமதோசம்
42. விசமசீத தோஷம்
43. பீதஜிம்மக தோஷம்
44. ரக்த ஜிம்மக தோஷம்
45. கிருஷ்ண சிம்மக தோஷம்
46. அகந்துக சுரம்
47. அபிகாத சுரம்
48. சாபச்சுரம்
49. அபசார சுரம்
50. அபிஷங்க சுரம்
51. பூதா வேசசுரம்
52. அவுவித கந்த சுரம்
53. விஷசுரம்
54. கோபசுரம்
55. பய சுரம்
56. துக்க சுரம்
57. கால சுரம்
58. சத்தாதி சுர பேதம்
59. சாரீராதி சுரபேதம்
60. விசம சுரம்
61. ரசதாது கதசுரம்
62. ரக்ததாது சுரம்
63. மாமிச தாது கதசுரம்
64. மேதோ தாதுசுரம்
65. அஸ்தி தாதுசுரம்
66. மச்ச தாதுசுரம்
67. சுக்கில தாது கத சுரம்
68. சரும தாதுகத சுரம்
69. அசாத்திய சுரலட்சனம்
70. சுரத்தின் தசா அவஸ்த்தை நிதானம்
|
குறிப்பு :- இந்த
மேற்கண்ட அட்டவணையில் உள்ள படி இனி ஒவொரு
தொகுப்புகளாக பார்க்கலாம்.
ஸ்ரீமத் மேதா தட்ஷினா மூர்த்தினே நம
அனுபவ வைத்திய தேவரகசியம் --- தேக நிதானம் :--
முதற்காண்டம் – ஆரம்பம்
சுலோகம் –
|
ஏநாத் ரசர்வே பிரகடிக் ருதாஸ்தே பரோபகாராய தமுத்ப
ஜேஹம்||
பராத்பரேய :
புருஷ: புரானாஸ் ஸநாதனோ யோபிச விஸ்வகர்த்தா |
யஸ்யான் தபாரம் நசுகாதயோபி விதுர் ஹிதேவம்
தமஹம்ஸ்மிராமி ||
ஷடங்க வேதாஸ் ஸகலோ பவேதா யாத : ப்ரஜாதா உதசு ருஷ்டிகாலே
பொருள் –
பரத்பரனும்,புராண புருஷனும் சனாதணனும், சிருஷ்டி, ஸ்திதி, சங்கார காரணராகிய எந்த
பரப்பிரமம் சுருபமானது தனது நிஜ தத்துவத்தை சுகாதி பிரம்மயோகிகள் அறியார்களோ அந்த
பரப்பிரமத்தை நான் திருகரனசுத்தியாய் தோத்திரிக்கிறேன். மேலும் உலக உற்பத்தி
காலத்தில் சிஷாதி ஷடங்க சுஹித வேதங்களும், ஆயுர்வேத உபவேதங்களும் உலோகோபகாரமாக
உண்டாக்கின சாஷாத் பகவத் சுருபத்தை நான் நமஷ்கரிகிறேன்.
தோஷ தேகலட்சனம் –
இச்சடலமானது எழுபத்தீராயிர நரம்புகளும், மூன்றை கோடி ரோமங்களும்,
தோல், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மச்சம், சுக்கிலம், என எழுவகை
தாதுக்களும், பிரிதிவி, அப்பு, அணிலம், வாயுவு, ஆகாயம் என ஐந்து பூதங்களும்,
அவைகளின் கலப்பினால் இருபத்தி ஐந்து தத்துவங்களும் பஞ்சகோசங்களும் நவ துவாரங்களும்
அடங்கி தொன்னூற்று ஆறு அங்குல உயரமுள்ளது.
சரீர தத்துவ சங்கிராஹம் –
இவ்வுடலில் வயிற்றி நிடமாக
அன்னமய கோசமும், மார்பினிடமாக பிராணமய கோசமும், சிரசில் மனோமய கோசமும், இக்கோசத்தில்
தானே விக்கியான, ஆனந்த மென்கிற இரு கோசங்களும் கலந்து இருக்கின்றன. மேலும்
துலாயிரம் (900) நரம்புகள் முநூற்றி பத்து 310 பெரிய எலும்புகள்,
நூற்றி எழு மர்மஸ்தானங்கள், எழுநூறு போது நரம்புகள், இருபத்திநாலு இரத்தகத
நரம்புகள், ஐந்நூறு மாமிசப் பைகள், 16 கண்ட நரம்புகள்,
பருவமான காலத்தில் 556 பலம் இரத்தம் இருக்கிறது. புருஷர்களுக்கு பத்து
துவாரங்களும்,பெண்களுக்கு பத்தி மூன்று துவாரங்களும் இருக்கின்றன. இத் தேகத்தில்
தசைகள், ஆசையங்கள், தாதுக்கள், உபதாதுக்கள், பொறிகள், எவ்வேழாய் தான் இருக்கின்றன
(ஏலு ஏலாய்) மார்பில் சிலேத்துமமும் தாது ஜீவரக்தரசாயமும். இவைகளுக்கு கீழே
மூத்திராசயமும் இரிக்கின்றன. பெண்களுக்கு மூன்று இரத்தாசயங்களும் அதிகமாய்
இருக்கின்றன.
மேலும் வாதமானது பலமும்,
இரஜோ குணமும், சீதளமாயும் இருக்கிறது. பித்தமானது வெப்பமாயும், சத்துவ குனமாயும்
இருக்கிறது.. சிலேத்துமமானது தாமத குனமாயும், சீதளமாயும், குருவாயும் இருக்கிறது.
சிரா, தமனி என இரண்டு நாடிகள் தொப்புளில் இருக்கின்றன.
இரத்த விஷய விவரம் ---
உணவிலுன்டாகும், இரத்த
தாதுவானது முதலில் கஞ்சியைப் போலும், பிறகு நீராயும், பிறகு பிரானவாயுவினால்
அடிக்கப்பட்டு சுத்தமாகி அக்கினியுடன் கலந்து இரத்தமாகிறது. இதுதான் பிரானரசம் என்றும்,
ஜீவரசம் என்றும் காரணப் பெயர்களை அடைகிறது. இது தேகம் முழுதும் வியாபித்து
சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். இந்த இரத்தமானது விஷத்தால் சம்பவித்த நுரையுடன்
அதிகரித்து சீதள விஷத்தில் கலந்து மார்பில் கட்டிக் கொள்ளும். அதினால் உடனே
மனிதனுக்கு மரணஞ் சம்பவிக்கும். ஆகையால் மருத்துவன் இரத்தப் பரவலை வெகு
ஜாக்கிரதையாகப் அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டியது,
ஜடராக்கினி விஷயம் ---
உணவுகள் சேரும்படியான
இடத்திற்கு ஆமாசயம் அல்லது அன்னாசயம் என்று பெயர். ஆமாசயத்தில் உணவுகளை
ஜிரனஞ்செய்யும் அக்கினிக்கு ஜடறாக்கினி அல்லது உதராக்கினி என்று பெயர்.
அவ்வக்கினியானது காரணங்களை அனுசரித்து சமமாக்கினி, விஷமாக்கினி, தீட்ஷாக்கினி,
மந்தாக்கினி என பெயர்களை அடைகிறது.
வாதாதி விபரம் –
இதை எல்லோரும் கவனிக்க
வேண்டியது. *********************** வாதமானது வெப்பம், இலேசத்துவம், குளிர்ச்சி,
கறகறப்பு அனுவு இவைகளை உருவமாக பெற்றிருக்கிறது. தொப்புளின் கீழ் இடுப்பு தொடை
எலும்பு சருமம், முதலிய இடங்களில் பரவிக் கொண்டு அந்த இடத்தில்தானே இருக்கிறது.
தேகத்திற்கு உற்சாகம், உசுவாச நிசுவாசம், அபான வாயு, தும்மல், மலம், மூத்திரம்,
கொட்டாவி, பசி, தாகம், இருமல், நித்திரை,
கண்ணீர், சுக்கிலம், சுவாசம், வாந்தி, இளைப்பு, சப்ததாதுக்களின் சுபாவங்கள், ஞான
கர்மேந்திரியங்களின் சுபாவங்கள் ஆகிய இவைகளை கொண்டு போஷித்து தான் விகார இல்லாமல்
இருக்கிறது. வாயுவானது பிராணன், உதானன், வியானன், சமானன், அபானன், நாகன், கூர்மன்,
கிருகிரன், தேவததான், தனஞ்செயன் என தசவாயுக்களாக இருக்கின்றன.
சிரசில் பிராணனும்,
மார்பில் உதாணனும், இருதயத்தில் வியானனும், நாபியில் சமாணனும், குதஸ்த்தானத்தில்
அபானானும், வாந்தி செய்வது நாகனும், நேத்திரத்தில் கூர்மனும், மூக்கில் இருப்பது
கிருகிரனும், கொட்டாவி செய்வது தேவதத்தனும், வீங்கச் செய்வது தனஞ்சயனும் என்று தச
வாயுக்கள் என்று அறியவும்.
பித்த பிரகுருதி ---
பித்தமானது உஷ்ணம்,
இலேசத்துவம், பளபளப்பு விரோஜனம், ஜலபானம் செய்தல் ஆகியவைகளின் ரூபமாக
கொண்டிருக்கிறது. உந்தி கண் ஆமாம், இரசதாது, உதிரம் வியர்வை, சருமம், நாவிலும் ஜலம்
ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும், இது உந்திச்தானத்தில் தானே இருக்கும், சீரணம்,
உஷ்ணம் பார்வை பசிதாகம் சுவை, காந்தி பத்தி ஞாபகம், சவுரியம் மிருது முதலியவைகளைக்
கொண்டு தேகத்தை போஷித்துக் கொண்டு தான் விகாரம் இல்லாமல் இருக்கிறது. அனிலம், இரஞ்சகம்,
சாதகம், ஆலோசகம், பிராசகம் என ஐந்து பிரிவாயிருக்கிறது. அணிலபித்தம், இருதய
ஸ்தானத்தில் இருக்கிறது. ஆலோசக பித்தம் கண்களில் வாசம் செய்கிறது. பிராசகபித்தம்
சருமத்தில் வாசஞ்சம் செய்கிறது.
சிலேத்தும பிரகுரதி ----
சிலேத்துமமானது
வழுவழுப்பு, சீதளம், கனத்தால், மாந்தத்துவம், மினுமினுப்பு, ஸ்திரம், ஆகிய இவைகளை
ரூபமாக பெற்றிருக்கிறது. மார்பு, சிரசு, நாசி, நா, கண்டம், கண்கள் உரோமம், ஆமம், இரசதாது,
மேதோதாது இவ்விடங்களில் சஞ்சரித்துதுக் கொண்டு மார்பு ஸ்தானத்திலேயே இருக்கிறது.
மேலும் மழுமழுப்பு அசையாமை கீழ்களுக்கு உறுதி முதலியவைகளைக் கொண்டு தேகத்தை
போஷித்துக் கொண்டு தான் விகாரம் இல்லாமலிருக்கிறது.
இது அவலம்பம், சிலேதகம், போதகம், தருப்பகம், சந்திகம் என ஐந்து பிரிவாகி இருதய
ஸ்தானத்தில் அவலம்பக சிலேத்துமம் கிலேதக சிலேத்துமம் ஆமாசயத்திலும், போதக
சிலேத்துமம் நாவிலும், தருப்பாக சிலேத்துமம் சிரசிலும், சன்னிக சிலேத்துமம்
கீழ்களிலும் இருக்கின்றன.
வாதத்திற்கு பாதமுதல் நாபி வரையிலும் இடமென்றும், பித்தத்திற்கு நாபி
முதல் கண்டவரையிலும் இடமென்றும், சிலேத்மத்திற்கு கண்ட முதல் சிரசுவரையிலும்
இடமென்றும் அறிய வேண்டியது. மேலும் மலத்தை பற்றியது வாதம் என்றும்,
மூத்திரத்தைப் பற்றியது பித்தம் என்றும், விந்துவை பற்றியது சிலேத்துமம் என்றும
ஆயுர்வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வாத பிரகுருதியின் தொழில் ---
தேகம் கருப்பு,
சிகப்புநிறம், சஞ்சரிப்பு, பிரிவு, நோவு, நித்திரை இன்மை, இழப்பு, குத்தல்,
வியாதி, குடைச்சல் குன்றல், திமிர் முடக்குதல், சந்தோசம், தாகம், நடுக்கல்,
தடித்தல், கலைத்தல் அவயவமினம், அசைதல், மரம் போல் கிடத்தல், துவர்ப்பாக வாய் நீர்
ஊறுதல் என்னும் இக் குணங்களை உடையது.
பித்தத்தின் தொழில் ------
தேகத்தில் மஞ்சள் நிறம்
வெப்பம், தாகம், நோயின்மை, ஜீரனகாலத்தில் வெப்பமாயிருத்தல், சதா வியர்வைகசிதல், ஞாபகம்,
கோபம், அசைவின்மை, மூர்ச்சை, அவமதிப்பு, புளிப்பாகவும் கசப்பாகவும் வாய் நீருறுதல்
என்னும் இக் குணங்களை உடையது.
சிலேத்துமத்தின் தொழில் –
சரீரத்தில் வெண்மைநிறம்
வழுவழுப்பு, தினவு, சீதளம், மரியாதை, கீழ்கள் அசையாமை, கருமை, மந்தகுணம், மினுமினுப்பு,
சீக்கிரம் ஜீரனிப்பு, அதி நித்திரை, உப்பாகவும், தித்திப்பாகவும் வாய் நீர் ஊரல்,
என்னும் இக் குணங்களுடையது.
அஷ்டவித பரீசைகள்
முதலியது இரண்டாவது காண்டத்தில் விசேசமாய் எழுதப்பட்டு இருக்கிறது காண்க. அனுபவ
வைத்திய தேவரகசியம் என்னும் மருத்துவ நூலின் பிரதம காண்டத்தில் சரீர தத்துவ
சங்கிரகம் தோச பேதம் என்னும் முதல் வர்க்கம் – சம்பூரணம்
****************************************************************************************************************************************************
இரண்டாவது வர்க்கம் ----
சுரநிதனம் –
ரோகங்கள் உண்டாவதற்கு காரணம் –
முன் ஜன்மத்தில் செய்த
வினையானது இந்த ஜெமத்தில் பனிகளாக பாதிக்கின்றனவே என்று உலக வார்த்தை.
சுரம் அதிகமாய் தண்ணீர்
அருந்துவதாலும், அதிகமாய் மாதர் புணர்ச்சி செய்வதாலும் பகலில் அதிக நித்திரை
செய்வதினாலும் இரவில் விழித்துக் கொண்டு இருப்பதினாலும். மல மூத்திரங்கள்
காலத்தில் சரியாய் விசர்சனம் செய்யாதினாலும் மானிடராகிய நமக்கு 4998 வியாதிகள் வந்தனுகுகின்றன
என்று பூர்வ ஆசிரியர்கள் தமது செய்யுள்களில் புகட்டி இருக்கிறார்கள். அவற்றை
எல்லாம் ஒவ்வொன்றாய் கூறுதலில் சரியாய் விளங்காதென கருதி இரத்தக் கெடுதியினால்
அல்லது அதிகரிப்பதினால், உண்டானான ரோகங்கள் மாமிச விருத்தியினால் உண்டான ரோகங்கள்,
இருதயக் கெடுதியினால் உண்டான ரோகங்கள், உதர ஜடராக்கினி கெடுதியினால் உண்டான ரோகங்கள்,
சரீரங்களின் பேதங்களினால் உண்டான ரோகங்கள், மாமிசத்தால் உண்டான ரோகங்கள்
அசதியினால் உண்டான ரோகங்கள், மூத்திரத்தினால் உண்டான ரோகங்கள், கீடகாதிகளின்
கடிகளால் உண்டான ரோகங்கள் என மேற்கூறிய 4998 – வியாதிகளையும்
சமுதாயங்களாக சேர்த்து வர்க்கங்களாக சகல பிணிகளையும் சங்கிரகமாக வரைந்திருக்கிறது
எப்படியெனில்.
1.
வது
சிரரோகங்கள் ---
2.
வது இரத்த
பித்தகாசாதி ரோகங்கள் –
3.
வது தாக
ரோகங்கள்
4.
வது
மூத்திர காத ரோகங்கள்
5.
வது உத்தர
சம்பந்த ரோகங்கள்
6.
வது
விஷ்போடக் குஷ்டாதி ரோகங்கள்
7.
வது வாத
ரோகங்கள்
8.
வது மகாவாத
ரோகங்கள்
9.
வது அதி
தூல ரோகங்கள்
10. வது உன்மாத ரோகங்கள்
11. வது கர்ண ரோகங்கள்
12. வது விறன பேத ரோகங்கள்
13. வது விஷாதி பேத ரோகங்கள்
14. வது கீடகாதி பேத ரோகங்கள்
என சகல வியாதிகளையும் மேற்கூறிய பதினாலு வர்க்கங்களில் சங்கிரஹித்து
எழுதியிருக்கிறது என்று அறிக.
சுர நிதானம் – (காய்ச்சலைப் பற்றியது)
யாகம் செய்து கொண்டு இருக்கும் போது தஷபிரஜாபதி செய்த அவமானத்தால்
உண்டான கோபாவேசத்தல் பரமசிவனது பெருமூச்சில் இருந்து உண்டானது சுரம். சுரமானது
வாத, பித்த, கப, வாதபித்த, வாதகப, பித்தகப, சந்நிபாத, அகந்துக என்று எட்டு
விதங்களில் சுரங்கள் விளங்கிற்று.
காலம் தப்பி சாப்பிடுதல் அதிகமாய் சஞ்சரித்தல் தன சக்த்திக்கு
அதிகரித்து தொழிலைசெய்தல் மேற் கூரியவைகளால், ஆமஸ்தானத்தில் தோஷித்து அக்கினியை
மந்தப்படுத்தி, இரசதாது ஸ்தானத்தில் வியாபித்து சுரத்தை உண்டாக்குகின்றது.
மலபந்தனையால் சுரமுண்டாகிறது.
வாதசுர லச்சணம் ---
உறுப்புகளில் குத்தல்,
கண்களிலிருந்து சலம், மார்பு அடித்தக் கொள்ளுதல், அவயவங்கள் பந்தித்தல் நமை சூடு
பெருமூச்சு, சோவை வாந்தி, மூத்திரம், பச்சைநிறம், தேகத்தில் தளர்ச்சி, இடுப்பில்
வலிவின்மை, வயிறுப்பல், வாயில் தித்திப்பு, புளிப்பான பதார்த்தங்கள் மீது இஷ்டம்
இந்த லட்சணங்களை உடையது.
வாதசுரம் –
நூதனமாய் சுரம் கண்டபோது
பகலில் நித்திரை, நீராடுதல் அப்பியங்க ஸ்நானம், புசித்தல், சம்போகம்ஞ் செய்தல்
கோவித்தால் காற்றில் இருக்குதல், சஞ்சாரம் செய்தல் இவைகள் ஆகாது.
பித்தசுர லட்சணம் –
பிதற்றல், மேல் மூச்சு,
தலை நோய், அதிக தாகம், வயிற்றுவலி கோழை, கபம், அருசி, இவைகளுன்டாகும், வாய்கசப்பு,
தேகம் சூடாயிருத்தல், பதார்த்தங்கள் மீது இஷ்ட மில்லாமை, மூத்திரம் சிகப்பாய்
இருத்தல், பச்சை, சிகப்பு, கருப்பு நிறமாயும் இருட்டாயும் கண்களுக்கு தோன்றுதல்,
நாவில் ருசி இன்மை, மயக்கம், பிதற்றல் கண்களில் சிகப்பு வருணம், நடுக்கல், தேகச்
சுத்தல், ஆச்சரியப்படுதல் இந்த இலட்சணங்களை உடையது பித்தசுரம்.
சிலேத்தும சுரலட்சனம் –
கண்களில் நீர்வடிதல்
கண்டத்தில் கோழை கட்டல், பெருமூச்சு, நடுக்கல், வாயில் உப்பாயிருத்தல், கைகால்கள்
எரிவந்தம் மூத்திரம் அதிகமாய் விடுதல், தலை நோய், இளைப்பு, சரீர சந்திகளில் நோய்
பதார்த்தங்களிடத்தில் பிரீதி இல்லாமை கொஞ்சமாய் வியர்வை விடுதல் முதலிய குணங்களை
உடையது சிலேத்தும சுரம்.
வாத பித்த சுரம் –
மார்பு கண்டம், இவைகளில்
எரிவந்தம், தலைவலி, வாந்தி பெருமூச்சு, தாபம், நாவரலால், அருசி, தேகத்தில் திணை,
வயிற்றில் வாதம் கட்டுண்டல், கண் எரிச்சல், வியர்வை, மிகவும் ஆச்சர்யப்படுதல்,
வாய் கசப்பாயும் அல்லது புளிப்பாயும் இருக்குதல், மூத்திரம் நீல வருனமாயும் அல்லது
சாம்பல் வருனமாயும் இருக்குதல் என்ற குணங்களை உடையது வாத பித்த சுரம்.
வாத சிலேத்தும சுரம் –
தேகத்தின் மீது பிசு
பிசுப்பு, வாயில் உப்பாய் இருத்தல் தலைவலி தேகம் முழுவதிலும் குத்தல், குடைச்சல்,
கண்களில் நீர்வடிதல், வாந்தி, நாசிகையில் சலம்வடிதல், பெருமூச்சு, அதிகதாபம்,
தூக்கம் இன்மை, மூத்திரம் நுரையுடன் வருதல்,இந்த குணமுடையது வாத சிலேத்தும சுரம்.
பித்த சிலேத்தும சுரம் –
பச்சையையும், நீலமாயும்,
இருட்டையும் நேத்திரங்களுக்கு தோணுதல் கண்டத்தில் குறுகுறுப்பு நடுக்கல் வாய்கசப்பாயும்
உப்பாயும் அருசியாயும் இருத்தல் பிதற்றல், கால்களில் எரிவந்தம் கண்டத்தில் கோழை
கட்டுதல் நித்திரை இன்மை, வாந்தி மூத்திரம் வெண்மையாகவும் இருத்தல் பித்த
சிலேத்தும சுரம்.
சந்நிபாத சுர லஷ்சனம் –
இருமல், சுவாசம்,
பிராந்தி, அருசி பிரமை இவைகள் உண்டாகுதல் இளைத்தல், காதுகளில் வலியுண்டாகுதல்
தேகம் உஷ்ணமாயும் சீதளமாயும் இருத்தல், கண்டத்தில் கோழை நேத்திரத்தில் நீர்வடிதல்
கண்களின் இமை ஒட்டிக் கொள்ளல், நேத்திரம் சிகப்பாய் இருக்குதல் அழுதல் நடுக்கல்
முதலிய குணங்களை உடையது சந்நிபாத சுரம்.
தேகமானது ஒரு காலத்தில்
வெப்பமாயும் மறு சமயத்தில் சீதளமாயும் இருத்தல் எலும்பு கூடுகளிலும் சிரசிலும்
அதிக நோய் உண்டாகுதல் கண்களின் இமை ஒட்டிக் கொள்ளுதல். கண்களில் நீர்வடிந்து
கொண்டு சிவப்பாய் இருக்குதல், காதுகளில் விபரீதமான சத்தம் குத்தல் இவைகள்
உண்டாகுதல், நாவில் நீரின்றி முட்கள் உண்டாகுதல் கண் சொரிதல் மோகம், பிதற்றல்
இருமல், சுவாசம், அருசி, பிரமை, இவைகள் உண்டாகுதல். நாவரட்சியுடன் இரணமாயும்
முட்கள் உண்டாகுதல் தேகத்தின் உறுப்புகளில் வலிவின்மை கோழை கோழை சிகப்பு, மஞ்சள் வருனத்துடன் வெளிப்படுதல்
விகாரமான தலைச் சுற்றல் நாவரட்சி, மார்நோய், அபுரூபமாய் வியர்த்தல் மல
மூத்திரங்கள், பந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக வருதல் நாளுக்குநாள் தேகம் மெலிதல்,
கண்டத்தில் சதா குறுகுறுப்பு, தேகத்தின் மீது கருப்பு அல்லது சிகப்பு கிரந்திகள்
உண்டாகுதல் அல்லது கரப்பு சிகப்பு உண்டாகுதல். ஊமை போல் பேசாமலிருத்தல்
உறுப்புகளில் வலிமை இன்மை பசி இன்மை வயிறு கல்லைப் போலிருத்தல் நெடு நாளைக்கு
வியாதி பக்குவத்திற்கு வருதல் முதலிய குணங்கள் உடையது சந்நிபாத சுரம்.
சந்நிபாத சுர பேதங்கள் –
சந்நிபாத சுரமானது பதின்
மூன்று வித சந்நிபாத சுரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றன அவையாவன –
கண்டகுப்த சந்நிபாதம் –
கண்டத்தை இறுக்கி
பிடிப்பது போல் இருத்தல் பிதற்றல் தாகம் வாயு அதிகரித்தல் பிரமை தேகம் கனத்தல்
அலறி எழுந்து ஒடி விழுதல் நடுக்கல் மூர்ச்சை, இறப்பு, தலை நோவு, காதில் நோவுடன்
இரைச்சல் கண்டத்தில் முள் சொருகுதல் என்னும் இக் குணங்களை உடையது. (
இது கஷ்ட சாத்தியம் )
சந்திக்க சந்நி பாதம் –
கீல்களில் நோவு, வாயில்
நீங்காத கபம் இருமல், வயிற்றுவலி, ஆயாசம், தேகத்தில் எரிச்சல், தாகம், சுவல்ப
பிரமை என்னும் குணங்களுடையது.
( இது சுக சாத்தியம் )
தாந்திரிக சந்நி பாதம் –
அதிக அசதி, பெரு மூச்சு
விடுதல், சரீரம் எரிச்சல் பேதி ஆயாசம் தொண்டைக்குள் காரல், காத்து மத்திமம்,
நாக்கு முள்ளு போலிருத்தலோடு கருத்தால், தேகத்தில் அதிக காங்கை, அரோசிகம், சதா
மூக்கில் சலம் விழுதல் சுவல்ப வயிற்றுவலி என்று இக்குனங்களுடையது.
( இது சுக சாத்தியம் )
புக்க நேத்திர சந்நிபாதம்
கண்கள் கம்மலோடு கலங்கி
சிவந்து இறுக்கம் பிடித்து இருத்தல் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் தொடை சிரசு
விலாப்பக்கம் எழும்புகள் கீல்கள் இவைகளில் நோவு பிரமை பிதற்றல் நடுக்கல் என்னும்
குணங்களுடையது.
( இது அசாத்தியம் )
ருத்தாக சந்நிபாத சுரம் –
அவயவங்களின் அதிக நோவு,
உடம்பு எரிச்சல் காங்கை, கழுத்துக்குள் நோவுவோடு தினவு பிரமை, சோருதல் பிரலாபப்
பேச்சு, தாகம், பலம் அதிகபேதி அல்லது சுவல்ப பேதி என்னும் குணங்களுடையது இதில்
சரீரம் முழுவதும் நோவு எரிச்சல் உண்டாகும்.
(
இது அசாத்தியம் )
ஜிம்மக சந்நிபாத சுரம் –
நாவு விருத்தலோடு முள்ளு
முள்ளாக இருத்தல், இரைப்பு, இருமல் துர்பலம், மலசல விபரிதம் கழுத்துக்குள் எதுவோ
பூசினாற்போல் தோன்றி அதைத் துடைக்க வேண்டும் என்கிற நினைப்பு காத்து மத்திபம் வாய்
பேசக் கூடாமை என்ற குனங்கடையது
( இது கஷ்டத்திலும் கஷ்ட சாத்தியம் )
பிரலாப சந்நிபாத சுரம் –
அதிக பிதற்றல் உடம்பு
எரிச்சலுடன், மிகு வேதனை மனோ சிந்தனை, முன்கால் வீங்கி நோதல் நடுக்கல், மாறுபாடான
புத்தி என்னும் குணங்களுடையது.
அந்தக சந்நி பாதசுரம் ---
தாகம், சோருதல் தலைநோவு,
விக்கல், சரீரமுழுதும் உதறல் எரிச்சல் அல்பமலபந்தம், அக்கினி மாந்தம் இரைப்பு
உப்பிசம் என்னுங் குணங்களுடையது.
ரக்திஷ்டீவு சந்நிபாத சுரம் ---
ரத்தம் ரத்தமாகக் கக்கல்
வாந்தி, பிரமை, தாகம் பேதி அற்ப சுவாசம், விக்கல் ஞாபக பங்கம், சரீரத்தில் அதிக
காங்கையோடு நோவு, தேக முழுதும் கருப்பு கருப்பாகத் தடித்தல் ரத்த புடை என்னும்
குணங்களுடையது.
( இது அசாத்தியம் )
சித்த விப்பிரம சந்நிபாத சுரம் ---
பிரமை சோருதல், மதம்,
உடம்பெரிச்சல், பரியாசம் பண்ணுதல், பாடல் ஆடல் சரீர நோவு, பிதற்றல் கீல்கள்
எல்லாம் முறிவது போலிருத்தல் இரண்டு பக்க இடுப்பை அடிக்கடி பார்த்தல் பயத்துடன்
திரும்பி திரும்பி விழுதல் என்னும் குணங்களுடையது
( இது சாத்தியா
சாத்தியம் )
சீதாங்க சந்நி பாதசுரம் ---
சரீரமுழுவதும் மிக
சீதளத்தோடு நோவு குரற்கம்மல், அடிக்கடி ஒக்காளம், பேதி விக்கல் இரைப்பு பலவீனம்
என்னும் குணங்களுடையது.
( இது
அசாத்தியம் )
கர்ன்னிக சந்நி பாதசுரம் –
காதின் மூலத்தில்
வீக்கத்துடன் சத்தங் கேளாமை வாய் திறக்கக் கூடாமல் கண்டத்தை இறுக்கி பிடித்தல்
போலிருத்தல் உடம்பு எரிச்சலுடன் நடுக்கல், கொஞ்சம் நோவு வயிறு கொதித்தல் பிதற்றல்,
மார்பு இடித்தல் இரைப்பு இருமல் என்னும் குணங்களுடையது.
( இது கஷ்டத்திலும் கஷ்ட சாத்தியம் )
அபி நியாச சந்நிபாதசுரம் –
பசி நீங்குதல், முகத்தில்
பளபளப்பு பேச்சில்லாமை துர்பலம் பஞ்சேந்திரியங்கள் தன்மை குறைவு மயங்கிய நித்திரை
அறிவின்மை என்னும் குணங்களுடையது, இதில் தேக வியாபாரங்கள் நீங்குகின்றது
( இது அசாத்தியம் )
மேற்கூறிய சந்நிபாத சுரங்கள் மாதர்களுக்கு சூதக காலத்தில் கண்டாள்
சூதக சந்நி என்றும் கருப்ப காலத்தில் கண்டாள் கருப்ப சந்நி என்றும், பிரசவித்த
பிறகு கண்டாள் பிரசவ சந்நி என்றும், விரணத்தினால் கண்டாள் விரணசன்னி என்றும்
பெயர்.
முகத்தில் விகாரம்
உண்டானால் முக சந்நி என்றும், கைகால்களில் உதறல் உண்டானால் உதறு சந்நி என்றும்,
திரி தோஷத்தினால் உண்டானால் அந்த தந்த தோஷ சந்நி என்றும் அவயவங்களின்
தொந்தத்தினால் உண்டானால் தொந்த சந்நி என்றும் அலறி அலறி விழுவதால் அலறு சந்நி
என்றும் பெயர்.
சந்நி பாத சுரங்களின் வயது ---
சந்திகத்துக்கு நாள் – 7
அந்தகத்துக்கு நாள் – 10
ருத்தாகத்திர்க்கு நாள் – 20
சித்த விப்பிரமத்துக்கு நாள் – 18
சீதாங்கத்துக்கு நாள்
– 15
தாந்திரீகத்துக்கு நாள் – 25
கண்ட குப்ஜகத்திர்க்கு நாள் – 13
கர்னிகத்திற்கு நாள் – 60
புக்க நேத்திரத்திற்கு நாள் – 8
ரக்திஷ்டிக்கு நாள் --- 10
பிரலாபத்துக்கு நாள் – 14
ஜிம்மகத்துக்கு நாள் – 16
அபிநியாசத்துக்கு நாள் – 15
சில சந்நி பாதங்கள் உண்டான உடனே கொல்லும், சிலது கடைசியில் கொல்லும்,
இந்த சன்னிகளுக்கு சிற்சில கிரந்தங்கள் வேறு விதமாயும் சொல்லி இருக்கிறார்கள்.
அவைகளைக் காட்ட கிரந்தம் அதிகமாகும் என முக்கியமானவைகளை மாத்திரம் காட்டி
இருக்கிறேன்.
முன்பு கூறிய சந்நிபாத
சுரங்கள் அல்லாமல் தாக பூர்வாங்க சந்நிபாத சுரம் சீத பூர்வாங்க சந்நி பாத சுரம் என
இருவகைப் படும் சனிகள் இருக்கின்றன.
தாக பூர்வாக சந்நிபாத சுர லட்சணம் –
அசதியாகிய சோம்பல்,
காறியுமிழ்தல் வாந்தி, ஆயாசம் இதுவுன்டாகும் போது முதல் முதல் எரிச்சல் கொண்டு
வந்தது
( இது அசாத்தியம் )
சீத பூர்வக சந்நிபாத லட்சணம் –
மேல் கூறிய தாக பூர்வாக
சன்னியின் குணங்களுடன் பித்தாதிக்கத்தினால் கபங்கரைந்து நாசமடையும். இதனாலே
சிலேஷ்மமாகிய சீதளம் சாந்த மாகும் அப்போது புளியேப்பம், மூர்ச்சை, மதம், தாகம்
என்னும் குணங்களுண்டாகும்.
( இது சாத்தியம்
)
சுக சந்நிபாதம் ---
மந்தப் பட்டிருக்கையில்
அப்பியங்கனஞ் செய்து தயிர்சாதமும் புசித்து மாதருடன் புணர்ச்சி செய்வதினால்
உண்டாகும் இது சர்வாங்கத்திலாவது கண்ட ஸ்தானத்திலாவது வியர்வை கண்கள் சிவத்தல்,
சுரம் அன்னத்துவேசம், என்னும் குணங்கள் உடையது.
சப்த தோசபேதம் –
சுரம் பிறந்த ஒன்பது
நாள் வரையிலும் தருண சுரம் என்று பெயர், அந்த சுரத்தில் பரிமள போஜனம், குளிர்ந்த ஜலம்,
புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, நெய், நல்லெண்ணெய், வெள்ளம், சயித்திய
பண்டம், தாம்பூலம், புது வஸ்த்திரம், சிவந்த வஸ்திரம், சுகந்த புஷ்பம், சந்தானம்,
பச்சைக் கற்பூரம் கஸ்த்தூரி முதலிய பரிமள திரவியங்கள், காற்று வீடு பஞ்சனை
சந்திரன், சீதள உபசாரம் மாதார்களை விருப்புடன் பார்த்தல் அவர்களால் பரிசிக்கப்
படுதல் சையோகம் புத்தகம் வாசித்தல் யானை, குதிரை யேறுதல், அதிதூர நடை கோபம்
அழுதல், தேகம் அதிரல் என்பவைகள் அணுகில் வாதாதிகள் நாபியைப் பற்றி நாபியை குடிலப்
படுத்தி முகம் கண்டாம் நாசி, நா என்னும் இவைகளை சுருக்கி வெறித்த பார்வையை
உண்டாக்க தோஷம் பிரபலப்படும் அது எழு விதப்படும்.
அபத்திய தோஷம் –
சோம்பல், மூர்ச்சை,
பிரமை, தாகம், அதிக பிரலாபம், மார்பு நோய் என்பவைகள் உண்டாகும்.
சங்க தோஷம் –
சர்வாங்க நோய்,
நடுக்கல், மார்பு எரிச்சல், பொய்பேசல், அடிக்கடி எழுந்திருத்தல், பிரமை,உள்ளங்கால்
உள்ளங்கை குளிர்ச்சி என்னும் குணங்களை உண்டாக்கும்.
விஷம தோஷம் ---
சுரம், எரிச்சல்,
அதிதாகம், நாபி குடிலத்தொடு தீவிரமாக நடக்குதல், வயிறெரிச்சல், வியர்வை, அழலை
என்னும் குணங்களை யுண்டாக்கும்.
விசம சீத தோஷம் –
ஒரு தினத்திலேயே இரண்டு
தரம், மூன்றுதரம் நாலுதரம் குளிரோடு சுரத்தை உண்டாக்குவது அன்றி தாகம், புரண்டால்,
தலை நோவு, நாக்கு தடித்து முட்போலிருத்தல் பிரலாபம், சித்த பிரமை புரளல் என இக்
குணங்களை உண்டாக்கும்.
பீதஜிம்மக தோஷம் –
நாக்கு மஞ்சள் நிறமாக
வெடித்து ஈரமில்லாமல் முட்போலிருத்தல், சுரம், பிரமை, வியர்வை, மூர்ச்சை, தொண்டைக்
கம்மல் வெருட்சி, நடுக்கல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
ரக்த ஜிம்மாக தோஷம் –
நாக்கு சிவந்து
முட்போன்று கொஞ்சம் நீண்டு இருத்தல் சுரம் தாகம், எரிச்சல் எண்ணம் குணங்களை
உண்டாக்கும்.
கிருஷ்ண ஜிம்மாக தோஷம் –
நாக்கு கருத்து வரண்டு
முட் போலிருத்தல் அடிக்கடி எழுந்திருத்தல் சித்த பிரமை, வயிறு உப்பிசம், தினவு,
வியர்வை, தாகம், சோபம், அழலை, துடிப்பு, கைகால் அசதி, சரீரம் கருத்தால் என்னும்
குணங்களை உண்டாக்கும். மேல் கூறிய சப்த தோஷங்கள் எழு நாள் அல்லது பதினைந்து நாள்
சென்றால் சாத்தியப்படும். ஆனால் சிகிச்சை செய்துக் கொண்டு வெகு ஜாக்கிரதையாக
பார்க்க வேண்டியது. அப்படிக் குறித்த காலங்களில் சாத்தியப் படாவிட்டால்
அசாத்தியம்.
ஆகந்து சுரம் ---
நாம் புசிக்கும்
அன்னபானாதிகள் அன்றி வேறு விதத்தினால் உண்டாகும் சுரங்களுக்கு சமுதாயமாய் ஆகந்து
சுரம் எனப்பெயர் அவையாவன ---
அபிகாத சுரம் –
காயங்களினாலும்
இரனங்களினாலும் நெருப்பிடத்தே நடத்தும் தொழில்களினாலும் அதிக நடை அதிக உழைப்பு
இவைகளினால் உண்டாகும் சுரத்திற்கு அபிகாத சுரம் எனப்பெயர் முதலில் வாயுவானது
உடலில் நீக்கமற நிறைந்து அதிகரித்து ரத்தத்தை கெடுத்து சர்வாங்க நோவு உண்டாகும்,
இதனை உணவு முதலிய சாந்த சிக்ச்சையால் நீக்கவும்.
சாபச்சுரம் ---
இது பெரியோர்களின்
சாபத்தினால் உண்டானதால் அதிக மும்முரமாகயிருக்கும் சந்நிபாத சுரம்
குணங்களுண்டாகும், தேவதாராதனை பூசை, அன்னாதானம், பெரியோர்களின் சேர்வை
முதலியவைகளினால் நீங்கும்.
அபிசார சுரம் ---
உச்சாடனமாரண
ஹோமம்ங்களினால் உண்டாகும் ஆச்சர்யமான கொப்புளங்களும் தேக முழுதும் தோணும். சந்நி
பாதசுரம் குணங்களிருக்கும் இதுவும் சாபசுரம் மிகவும் கொடியது. இதை மணி மந்திர
ஒளஷதங்களினால் நிவர்த்திக்கவும்.
அபிஷங்க சுரம் ---
சேர்க்கையால்வரும்
சுரங்களுக்கு அபிஷங்க சுரம் என்று பெயர் அவைகளாவன ---
பூதா வேச சுரம் ---
காரணமின்றி நகைப்பு,
அழுதல், அதிக சுரம், வலி, கண்ணை உருட்டி விழித்தல், தேகங்கருத்தல், பிரலாபம், அதி
திண்டி சகல பதார்த்தங்கள் மீது விருப்பம், ஆடல் பாடல் ரோமச்சிலிர்ப்பும்,
நித்திரை, எரிச்சல் நளிர், தலை நோய், கண் சிவத்தல், வாந்தி விக்கல் சுவாசம்
பலவீனம், ஏப்பம், கொட்டாவி சிரமை மனோவேதனை, தொடை முதல் பாதம் வரையிலும் வியர்வை
சர்வாங்க சீதளம் ஈனத் தொணி திரி தோஷங்களின் விருத்தி என்னும் குணங்களுடையது. இது
புகை முதலிய சிகிச்சகளினால் விடும்.
அவுவித கந்தக சுரம் ---
ரசம், கந்தகம், பாசனம்,
சேங்கொட்டை, முதலியவைகளின் வேகத்தால் சுரம் உண்டாகி, மூர்ச்சை, தலை நோவு, தேக
வீக்கம், தும்மல் அதிக தாபம் என்னும் குணங்களுடையது. இதற்கு விஷப் பிரதி விச
சிகிஷை பொருந்தும்.
விஷசுரம் ---
மூர்ச்சை, பேதி,
எரிச்சல், முகங்கருத்தல், மார்பு நோவு, அதிகசுரம், என்னும் குணங்களுடையது.
கோபச்சுரம் –
தலை நோய், உடம்பு
பதித்தல், அதிகசுரம், பித்தம் அதிகரித்தல் என்னும் குணங்களுடையது. கோபந்தனிக்கச்
செய்து பித்தகாரி அவுஷதம் உபயோகப் படுத்தப்படும்.
பயச்சுரம் ---
புலம்பல், நடுக்கல், சுரம், அடிக்கடி பயப்படல், அதிக வார்த்தை,
வியர்வை, மிகு எரிச்சல், கண்கள் சிவத்தல், பலஹினம், சிரசிலும் கண்ணிலும் நோவு,
துர்பாஷை, போசனத்தில் இச்சை, நித்திரை பங்கம் தலை சுழலல், சுவாசம், சூலை, ரோமச்
சிலிர்ப்பு, சயித்தியம், மார்பிலும், இடுப்பிலும், தடிப்பு, பற்கடித்தல் என்கிற
குணங்களுடையது.
துக்க சுரம் ---
வாயில் வந்த பிரகாரம்
பிதற்றல், அதிக சுரம், அழுதல் என்னும் குணங்களுடையது.
காம சுரம் –
புத்தி, தயிரியம்,
வெட்கம், நித்திரை இவைகளின் கெடுதி, மோகம் எரிச்சல், அருசி, அதிகசுரம், ஆண்குறி,
தொப்புளின் கீழ் ஸ்தானம் தனங்களின் கீழ் ஸ்தானம், புருவம், நெற்றி ஆகிய இடங்களில்
எரிச்சல், சையோகத்தில் இச்சை, நாட்டியஞ் செய்ய நினைவு, அதிக தாகம், கண் சிவத்தல்,
அடிக்கடி போசனத்தின் மீது இச்சை, புஞ்சிரிப்பு, நித்திரை பங்கம் என்னும்
குணங்களுடையது.
இந்த ஏழுவகை சுரமும்
சாரீர சுரம் மானசீக சுரம் என இருவகைகுள் அடங்கும்.
சந்தாதி சுரபேதம் ---
சந்தாதி சுரமானது
திரிதோஷ பலா பலங்களினாலும், ஆறு ருது கால பேத பலா பலங்களினாலும் உண்டாகும். இது
சந்ததரம், சத்த சுரம், அந்நியேத்துக சுரம் துவியாகிக சுரம், திரியாக சுரம்
சதுர்த்திக்க சுரம் என ஆறு விதப்படும்.
1. ) இரவும் பகலும்
விடாமலிருக்கும் சுரம் சந்தத சுரம்,
2.
) அதிக கூச்சலும்
துர்பாஷை தலைதிருப்பு, அதிதிண்டி, என்னும் குணங்களுடன் பகல் ஒருதரம், இரவில்
ஒருதரம் வருஞ் சுரம், சதாசுரம்
3.
) இரண்டு நாள்
விடாமல் காய்ந்து, இரண்டு நாள் விட்டு இருந்து மறுபடியும் காயும், இது மறு நாளில்
வருவதால் அந்நியேத்துக சுரம் என்னும் இரண்டாம் நாளில் வரும் சுரம், துவியாசிக
சுரம் என்று பெயர், இவைகளினால் மிக சீதளம், தேக எரிச்சல் ஏப்பம், புருவ வேதனை,
கைகால் எரிச்சல் அதி நித்திரை என்னும் குனங்களுடையவை.
4.
) மூன்று நாளைக்கு
ஒரு முறை வரும் சுரம் திரியாக்கி சுரம், இதில் அதி சீதளம் தேகம் அதிரல், அக்கினி
மந்தம், அஜீரணம் புழுக்கைப் போல் மலம் விழுதல், அன்ன துவேசம் என்னும் குணங்களுடையது.
5.
) நாலா நாளில் வரும்
சுரம் சதுர்த்திக்க சுரம் இது கஷ்ட சாத்தியம்.
6.
) வாத
சிலேத்துமத்துடன் மிக குளிச்சி, ஐந்தா நாள் மாறி வருதல் ஆயாசம், கபாதிக்கம்,
நடுக்கல், உள் எரிச்சல் தலை திருப்பல் அக்கினி மந்தம், அன்னதுவேசம், வீக்கம்,
சூலை, இவைகளை சீதசுரம், குளிர் சுரம் நளிர் சுரம், முறைக் காச்சல் என்றும்
வழங்குவார்கள்.
வாத சுரம் ஆதியாக சந்ததாதி சுரம் வரையிலும் சொலப்பட்டது.
சாரீராதி சுர பேதங்கள் –
1.
) சாரிரத்தில்
தபித்தனை உண்டாகி பிறகு வரும் சுரம் இதற்கு சாரீர சுரம் என்று பெயர்.
2.
) முதலில் மனதை
தப்பிக்கப் பன்னி பிறகு சுரங்கானும் இதற்கு மானசீக சுரம் என்பர்.
3.
) வியர்வை, பலவீனம்,
வாந்தி, விக்கல், வீக்கம், இருமல், இரைப்பு, கபாதிக்கம், தலைச் சுழற்றல், மார்பு
நோவு, நாபியுள்ளடங்கள், கண் சிவத்தல், நாக்கு சிவப்போடு முள்ளைப் போலிருத்தல்,
நித்திரைபங்கம் என்னும் குணங்களோடு சாந்தமாக பிறக்கும் சுரம் செளமிய சுரம் என்று
பெயர்.
4.
) ஆரம்பத்தில் அதிக
உக்கிரமாக கண்டு நளிர் காச்சலுக்கு உண்டான குனங்களுடையதால் தீச்சன சுரம் என்று
பெயர்.
5.
) வயிற்றில் அதிக
சங்கடமும் மல பந்தம் முதலிய விகாரம் உண்டாகி பிறகு சுர குணம் எல்லாம் உண்டாகும்
சுரத்திற்கு உட்சுரம் என்று பெயர்.
6 . ) சப்த தாதுக்களை
தொடராமல் சருமத்தின் மேலே குபீர் என்று கண்டு சில நேரத்தில் தோஷம் ஒன்றும்
இல்லாமற் போய்விடும்.இதற்கு வெளி சுரம் என்று பெயர்.
7. ) வருஷ ருது காலமாகிய
ஆவணி புரட்டாசி மாதங்களிலும் வாத சுரம் போலும் ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில்
பித்தசுரம் போலும், சித்தரை,வைகாசி மாதங்களில் கப சுரம் போலும் காணும் சுரத்திற்கு
பிராகிருத சுரம் என்று பேர். இதில் வாத சுரம் கஷ்ட சாத்தியம்
8. ) மாசி பங்குனி
மாதங்களில் வாத சுரம் போலும், ஆணி ஆடி மாதங்களில் பித்த சுரம் போலும், மார்கழி தை
மாதங்களில் சிலேத்தும சுரம் போலும் காண்கிற சுரத்திற்கு வைகிருத சுரம் என்று பேர். இந்த மூன்று
சுரங்களும் மிகவும் கஷ்ட சாத்தியம்.
9. ) மேற் கூறிய
பிராகிருத சுரங்கள், வைகிருத சுரங்கள் உண்டான போது அவைகளின் குணங்களும்
10. ) சப்த தாதுக்களில்
பிரவேசித்து நெடு நாளாக நீங்காமல் சந்நிபாத சுர லட்சனமுளுவதும் உண்டாகிய சுரமும்
காலை மாலை சுடுகையுடன் உண்டாக்கிய சுரமும் தேக பலத்தையும், மாமிசத்தையும்,
குறைத்து கோழை விழும்படி உண்டாக்கிய சுரமும் அசாத்திய சுர மென்று பேர்.
11. ) சுரங்களுக்கு
இருக்கின்ற இரைப்பு, மூர்ச்சை, பிரமை, ஒக்காளம் தாகம், பேதி கொட்டாவி, விக்கல்,
சரீர வேதனை மலபந்தம், அக்கினி மந்தம், அஜிரனபேதி, அதிக சீதம் விழுதல், வயிற்று
நோவு நடுக்கல், தாகம், தலை திருப்பல், கைகால் குளிர்ச்சி, உப்புசம் கபாதிக்கம், நித்திரை
பங்கம், கண்களில் சலம் வடிதல் என்னும் இக் குணங்களை உடையது சாமச் சுரம்.
12. ) அதிக காங்கை,
அடிக்கடி தாகம், பிரலாபம், பெருமூச்சு, பிரமை அதிக பேதி, மனோவியாகூலம். இது
ஆமாசயத்தின் கெடுதியால் புசிக்கும் அன்னம் சீரனியாமல் காணுவதால் இதனை நிராமச்
சுரம் என்று பேர். இந்த சுரத்திற்கு ஏழு நாள் விடாமல் இலங்கணம் போட்டால் மேற்கூறிய
துர்க்குணங்கள் போய் சீரண சக்தி உண்டாகி சாத்தியப்படும், சுவாசம், இருமல்,
வாதகபங்கள் கூடிய சுரம் துர்பலம், காந்தியீனம், சிரோபாரம், தேகஞ்சுடுங்கால்
கண்டத்திலும் நெற்றியிலும் வியர்வை கண் சிவத்தல், நா வரளல் என்னும் குணங்களுடையது
நிராமசுரம்.
1 3.
) நெட்டுயிர்ப்பு,
வியர்வை, பிதற்றல், வாந்தி, புரளல், நடுக்கல் பெருங் கூச்சல், தேகம் சில்லிட்டு
நிறமாறுதல், ஞாபக மறதி, கோபப் பார்வை ஆசனத்திலிரைச்சல் விரைவில் சலஞ்சலமாக பேதி
என்னும் குணங்களுடையது. உச்சியமான சுரம், வாதாதி தோஷமானது சப்த்தாதுக்களை கலங்கப்
பண்ண உண்டாக்கிய சுரம் விடுகிற தருணத்தில் கூடி குணங்களெல்லாம் பிறப்பதால்
முச்சியமான என்று பேராம் * முச்சியம் என்றால் விட்டுவிடுதல்
விஷம சுரம் ---
நெடுநாளாக சுரமானது
உள்ளுக்குள்ளே விஷமித்தால் மும் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு தாதுக்களைப் பற்றி
எட்டுவித தாதுகத சுரங்கள் உண்டாகும் அவைகளாவன
1.
தாது கதசுரரசம்
---
அதயிரியம், அரோசகம், வாந்தி, வாயில் சலம் ஊரல், சரீரம் எல்லாம்
நோவுடன் கனத்தல், பெருங் கொட்டாவி, முக விகாரம், பலவீனம், ரோமச் சிலிர்ப்பு,
என்னும் குணங்களுடையது இந்த சுரம் ஏழுநாளைக்குப் பிறகு ரத்த தாதுவில் அனுசரிக்கும்
2.
) ரத்த
தாதுசுரம் --
மேற்கூறிய குணங்களுடன் உமிழ் நீரில் இரத்தம் வீழ்தல் தாகம்,
உடம்பெல்லாம் சிவந்த தடிப்பு, தேகம் சிவத்தல் இரண்டு நெறியும் இடித்தல், கீல்கள்
எல்லாம் நோவுதல், நாக்கு வலுவளுப்புடன் மஞ்சள் நிறமாயிருத்தல் நெஞ்சிற் கபாதிக்கம்
நித்திரை, மலபந்தம், பேத்தியுடன் சீதக் கழிச்சல், என்னும் குணங்களுடையது. இந்த
சுரம் இருப்பத்து ஒருநாள்க்கு மேல் மாமிசதாதுவில் கலக்கும்
3.
) மாமிச
தாது கதசுரம் --
கண்களில் இருள் கம்மளுடன் நீர் கம்மல், வாந்தி, வாய் நாற்றம், அசதியால்
கைகால்களை தூக்கிப் போடுதல், தேகத்தில் எதுவோ பூசினது போல் வரவரப் பாயிருத்தல்,
மினு மினுப்பு வயிர் உப்புசத்துடன் நோவு, சுரங்களிக்குரிய குணங்கள் என்பவைகளை
உடையது. இந்த சுரம் இரண்டு மாதம் வரையிலும் போராடி அப்புறம் மேதோ தாதுவில்
சேர்ந்து மேதோ தாது கத சுரமாகும்.
4.
) அஸ்த்தி
தாது கத சுரம் ---
இரத்த நரம்பு சன்ன நரம்பு, எலும்பு, கீல் இவைகளில் நோவு தேகம்
வெளுத்து பஞ்சைப் போல் மெலிந்து இருத்தல், ஒருவேளை சீதளம் அடிவயிறு நோவு இத்துடன்
சுரத்தின் குணங்களுடையது. இந்த சுரம் இரண்டு வருடம் இருந்து பிறகு மச்ச தாது கத
சுரமாய் மாறும்.
5.
) மச்ச
தாது கத சுரம் –
தோசாதிக்கம், மேல் மூச்சு, கிழ் மூச்சு, கண்டத்தில் குறுகுறு என்று
சத்தம் உள்ளே எரிச்சல், வெளியில் குளிர்ச்சி தேகஞ் சுட்சித்தளுடன் உபாதை, தொண்டை
முழங்கால் இவைகளில் கீழ் வேதனை பிராண வாயுவும், அபனவாயுவும், தம்பித்தல் என்னுங்
குணங்களுடையது. இந்த சுரம் மூன்று வருடத்திற்கு பிறகு சுக்கில தாது கத
சுரமாய்மாரும்.
6.
),சுக்கில
தாது கத சுரம் –
கண்களிலிருந்து கம்மல், மர்மஸ்தானங்கள் அதாவது மூன்று மூன்று
முடிச்சுகளுள்ள நரம்பு ஸ்தானஞ்களாகிய புருவம், உச்சி கண்டம் மார்பு, மார்புக்குங்
கீழ் உந்தி, உதடு, பீசம், முழங்கால், கணுக்கால், இடுப்பு, காலின் பெருவிரல் சுற்று
விரல் தோல் என பதிநான்கு ஸ்தானங்களின் வேதனை ஆண்குறி சுருங்கல், இந்திரிய சீரணம்
அதிக நித்திரை ஞாபக மறதி இன்னும் சுரத்தின் அந்திய குணங்களை உடையது.
மேற்கூறிய ரசம், ரத்தம், மாமிசம் மேதை அஸ்தி என்னும்ஞ் சுரங்கள் கஷ்ட
சாத்தியம், மச்சையையும், சுக்கிலத்தையும், பற்றிய சுரம் தப்பாமல் எம புறத்திற்கு
ஏகும்படி செய்யும் என்று அறிக.
7.
) சரும
தாது கத சுரம் ---
சரீரத்தின் மேற்காய்தல், நாடி குடிலப்பட்டு மந்தமாக நடத்தல், தலை
நோவு, சலத்தில் விருப்புடன் தாகம், தேகம் வெளிறல், எரிச்சல், பிரமையாகப் பேசுதல்,
வாய் நீரஊறுதல் மயக்கம் என்னும் குணங்களை உடையது.
8.
) அசாத்திய
சுரலச்சனம் ---
வாதாதி சுர ரோகிகட்க்கு தேக நடுக்கலுடன் நோவும், மேல் மூச்சு,
மூர்ச்சை, சற்று நேரத்துக்கு ஒருக்கால் இளைப்பு, மார்பு நோவு, கண்ணில் நோவுடன்
குத்தல், முகம் குங்குமம் போல் சிவத்தல்,உசுவாச நிசுவாசம் கழுத்து குறுகுதல்,
அல்லது நீளுதல் இரவில் எரிச்சல், பகலில் குளிர்ச்சி நாவு கருத்தால் அல்லது சிவத்தல்
ஆசனம் வெளிப்படல் என துனி சிலேஷ்ம நாடி
அதி வேகமாய் நடக்குதல் சுவாசம் சில்லிடல், வாயில் குபீர் என்று வரும் சுவாசம்
மாத்திரம் சுடுதல், மார்பு, உந்தி மூக்கு, உள்ளங்கை, ஆகிய இவ் ஐந்து இடங்களிலும்
மிகு குளிர்ச்சி சிரசுமாத்திரம், அக்கினி போல் சுடல், நாட்கள் அற்று கண்ட
ஸ்தானத்தில் மாத்திரம் குடிலமாக நடந்தாலும் தேகமுழுதும் குளிர்ச்சி இரண்டு துடை
கவட்டியில் வீக்கம் அபத்திய வஸ்துகளின் மீது இச்சை, தன்படுக்கை விட்டு ஓடுதல்
அடிக்கடி முகத்தை கையால் தடவுதல் படுக்கையை காலினால் அடிக்கடி தட்டுதல், இன்னும்
சந்நிபாத அகோர குணங்களுடையது அசாத்தியம் ஆகையால் வைத்தியர்கள் அசாத்திய சுர
ரோகிகளிடம் சென்றாலும் அவிடதங்கள் ஒன்றும் பிரயோகிக்காமலும் அந்த நோயாளிக்காவது
அவனது பந்து ஜனங்களுக்காவது தெரியப் படுத்தாமல் நின்று விட வேண்டியது. ஒரு வேலை
தெரிவித்தால் அந்த ரோகி திகில் அடைந்து அதி சீக்கிரத்தில் மரணம் அடைவான். அதனால்
மருத்துவனுக்கு தோஷம் வந்தனுகும் என்று அறியவும்.
சுரத்தின் தசா அவஸ்த்தை ---
அ ) கொஞ்சம்
ஞாபகமிருத்தல், ஆ ) முன் இறந்தவர்களை கண்ணிற் கண்டு பேசல் போலிருத்தல், இ ) சித்த பிரமையாகுதல், ஈ ) மேல் மூச்சு
வாங்குதல், உ ) விழித்த விழி விழித்தது போலிருத்தல், ஊ ) வேற்றுக் குரல் உண்டாகுதல்,
எ ) சரீரம் முழுவதும் அதிக எரிச்சல் எழும்புதல், ஏ ) தன்கையால் முகத்தை தடவிக்
கொள்ளுதல், ஐ ) சரீரம் முழுவதும் சிலேத்தும வியர்வை காணுதல், ஒ ) தேகத்தை விட்டு
ஆவி நீங்குதல் இப் பத்து அவஸ்த்தைக்குள் முதல் மூன்று அவஸ்த்தை வரையிலும்
வைத்தியம் செய்யலாம் என்பது வைத்திய ஆசாரியன் கருத்து. ஒன்பதாவது அவஸ்த்தை
வரையிலும் அதாவது பிராணன் கண்டகத மாகிற வரையிலும் வைத்தியம் செய்யலாம் என்பது
சரகர், அக்கினிவேசர், முதலிய பூர்வ தபோதனர்களின் கருத்து.
No comments:
Post a Comment