|
முதற்காண்டம் ரோகங்களின் அட்டவணை – 3
|
|
1.
சய ரோகம்
2.
ஊர்த்துவ கத தோஷம்
3.
அதோகத தோஷம்
4.
கோஸ்ட்ட கத தோஷம்
5.
திரியக் கத தோஷம்
6.
சந்திக தோஷம்
7.
சய உபத்திரவ நிதானம்
8.
வாத சய ரோகம்
9.
பித்த சய ரோகம்
10.
சிலேஷ்ம சய ரோகம்
11.
திரி தோஷ சய ரோகம்
12.
சய ரோக சாத்தியா சாத்திய லட்சணம்
13.
குரல்கம்மல் ரோக பேதம்
14.
வாதக் குரல்கம்மல் ரோகம்
15.
பித்தக் குரல்கம்மல் ரோகம்
16.
சிலேத்துமக் குரல்கம்மல் ரோகம்
17.
திரி தோசக் குரல்கம்மல் ரோகம்
18.
சய குரல்கம்மல் ரோகம்
19.
குரல்கம்மல் ரோக சாத்தியா சத்தியங்கள்
20.
அரோசகம் ரோகம்
21.
வாந்தி ரோகம்
22.
வாத வாந்தி ரோகம்
23.
பித்த வாந்தி ரோகம்
24.
சிலேத்தும வாந்தி ரோகம்
25.
திரிதோஷ வாந்தி ரோகம்
26.
திருஷ்டான்ன வாந்தி ரோகம்
27.
கிருமி வாந்தி ரோகம்
28.
அசாத்திய வாந்தி ரோகம்
29.
மார்பு ரோகம்
30.
வாத மார்பு நோவு
31.
பித்த மார்பு நோவு
32.
திரி தோஷ மார்பு நோவு
33.
கிருமி மார்பு நோவு
34.
சாத்தியா சாத்தியங்கள்
35.
தாக ரோக ரோகாதிகள்
36.
வாத தாக ரோக லட்சணம்
37.
பித்த தாக ரோக லட்சணம்
38.
சிலேத்தும தாக ரோக லட்சணம்
39.
திரிதோஷ தாக ரோக லட்சணம்
40.
ரசசய தாக ரோக லட்சணம்
41.
உபசர்க்க தாகரோக லட்சணம்
42.
அசாத்திய தாக ரோக லட்சணம்
43.
மதாத்திய ரோக லட்சணம்
44.
தும்மிச்சக விஷய ரோக லட்சணம்
45.
தும்மிசகரோக லட்சணம்
46.
விஷய ரோக லட்சணம்
47.
மத ரோக லட்சணம்
48.
வாத மத ரோகலட்சனம்
49.
பித்தமத ரோகலட்சனம்
50.
சிலேத்தும மதரோக லடணம்
51.
சந்நிபாத மதரோக லட்சணம்
52.
ரத்தமத ரோக லட்சணம்
53.
மத்திய பான மதரோக லட்சணம்
54.
விசமத ரோக லட்சணம்
55.
மூர்ச்சா ரோகம்
56.
வாத மூர்ச்சாரோக லட்சணம்
57.
பித்த மூற்சாரோக லட்சணம்
58.
சிலேத்தும மூச்சரோக லட்சணம்
59.
திரிதோஷ மூர்ச்சாரோக லட்சணம்
60.
சந்நியாசி ரோக லட்சணம்
61.
மூல ரோக லட்சணம்
62.
சகசமூல ரோகம்
63.
உத்தரச மூலரோகம்
64.
சுட்க மூலரோகம்
65.
ஆர்த்திர மூலரோகம்
66.
வாதமூல ரோகம்லட்சனம்
67.
பித்தமூல ரோக லட்சணம்
68.
சிலேத்தும மூலரோக லட்சணம்
69.
தொந்தமூல ரோகலட்சனம்
70.
திரிதோஷ மூலரோகம் லட்சணம்
குறிப்பு – இனி இந்த ரோக
அட்டவணைப்படி நோய்களின் விபரங்களைப் பார்ப்போம்
|
சய ரோகம் –
இந்த ஷய ராகத்தையே, யச்மா ரோகம் ராஜ்ய
சூமரோகம், ரோக ராஜ்ம, கபரோகம், ஈளைரோகம் என்று பெயர். பீனிசம், அதிக இருமல்,
மந்தாக்கினி, தேகவற்றல், மார்பு அதிரல், வாந்தி, அரோசகம், வீக்கம் இன்னும் அநேக
கோரமான குணங்களை உடையது.
இந்த ரோகத்துக்கு ஒருநாளுக்குள் பதினோரு
ரூபங்களை உடைய ஐவகைத் தோஷங்கள் உண்டு அவையாவன.
ஊர்த்துவ
கத தோஷம் –
பித்த கப ஸ்தானத்திற்கு
மேலாக வாயுவை சஞ்சரிக்கச் செய்து, பீனிசம், இருமல், இளைப்பு, தோலில் நோவு, தலை
நோவு, குரல்கம்மல், அரோசகம் என்னும் ஆறு ரூபங்களை உண்டாக்கும்.
அதோகத தோஷம் – நாபியின் ஸ்தானத்திற்கு கீழ் வாயுவை சஞ்சரிக்கச் செய்து
அடிக்கடி மலம் நழுகல், வாய் உலறல், என்னும் இரண்டு ரூபங்களை உண்டாக்கும்.
கோஷ்ட கத தோஷம் (
கோஷ்டம் – வயிறு ) –
வயிற்றுக்குள் வாயுவை சஞ்சரிக்கச் செய்து வாந்தியாகிய ஒரு ரூபத்தை
மாத்திரம் உண்டாக்கும்.
திரியக்க கத தோஷம் ( திரியக் – குறுக்கு ) --
இரு பக்க விலாக்களிலும் குருக்குகேயும் வாயுவை சந்சரிக்கச் செய்து
அவ்விடங்களில் சூலை நோய் என்னும் ரூபத்தை மாத்திரம் உண்டாக்கும்.
சந்திக தோஷம் –
சகல கீல்களிலும் வாயுவை
சஞ்சரிக்க செய்து சுரமாகிய ஒரு ரூபத்தை மாத்திரம் உண்டாக்கும்.
ஷய உபத்திர நிதானம் –
சய ரோகிகளுக்கு ஐவகை
தோசத்தினால் பதினோரு ரூபங்கள் அதிகரிக்கும் போது கண்டத்தில் மார்பிலும் நோவு, தேக
வேதனை கொட்டாவி, கோழை விழுதல் மந்தாக்கினி, வாயில் துர்க்கந்தம் வீசுதல் என்னும்
குணங்கள் உண்டாக்கும்.
வாத ஷய ரோகம் –
சிரசு, தோல், கண்டம்
இவைகளில் நோவு, விலாபக்கங்களில் குத்தல் குரல்கம்மல், கரப்பு, வெண்மை நிறங் கலந்த
கோழை விழல் என்னும் குணங்களுடையது.
பித்த ஷய ரோகம் –
கை,கால் எரிச்சல் ரத்தங் கலந்த பேதி,வாயிற் துர்க்கந்தம் வீசுதல்,
மஞ்சள் அல்லது சிகப்பு கோழை விழுதல் என்னும் குணங்கள் உடையது.
சிலேஷ்ம சய ரோகம் –
சிரசும் தேகமும்
பாரித்தல், அரோசகம், வாந்தி, இருமல், வாயிற்சல ஊறல் பீனிசம், ஈனத்தொனி இரைப்பு,
மந்தாகினி, வெண்மை நிறமாகிய கோழை விழுதல் என்னும் குணங்களுடையது.
திரிதோஷ சய ரோகம் ---
வாத, பித்த, கப
தோஷங்களின் துர்க்குணங்கள் எல்ல்லாம் ஒரே காலாத்தில் உடையது.
சயரோக சாத்தியா சாத்திய லஷ்சனம் –
சயரோகிக்கு பக்க
நோய்கள் வயிறு உப்பிசம், ரத்த வாந்தி, சீழ்வாந்தி, இரண்டு புஜங்களிலும் உபாதை
சீழாகவும் சிகப்பாகவும் கருப்பாகவும் கோழை வருதல், சுரம், இருமல், இரைப்பு, தேககாந்தி,
பலம், தொனி, இவைகள் குறைவுபடுதல் பீசத்திலும், வயிற்றிலும் வீக்கம் என்னும்
குணங்கள் உண்டானால் அசாத்தியம். மேற்ககூறியவைகள் இல்லாது இருந்தால் சாத்தியம்.
சரகம் முதலிய கிரந்தங்களில் வாத சாயம், பித்த சயம், சிலேத்தும சயம் சுட்கசயம், சூலை
சயம், ராசசயம், விவர்ணசயம், மந்தாக்கினி சயம், வாந்தி சயம், ஏப்பச்சயம், சோவைசயம்,
மூர்ச்சை சயம், எரிச்சல் சயம் விக்கல் சயம், அரோசக சயம், பாண்டு சயம் என்று இருபது
விதங்களாக எழுதப் பட்டு இருக்கின்றன.
குரல்கம்மல் ரோக பேதம் –
குரல்கம்மல் ஆறு விதப்படும்
அவையாவன –
வாத குரல்கம்மல் ரோகம் –
குரல் வளையில் உள்ளீரம்
வரண்டு சுட்கித்து முட் சொருகுதல் போல் நோவு, வழுவழுத்த பதார்த்ததிலும், உஷ்ண
பதார்த்திலும் விருப்பம், நடுக்கலான தொனி என்னும் குணங்களுடையது.
பித்தக் குரல்கம்மல் ரோகம் –
குரல்களிலும், தாழ்வாய்
தாளிலும் எரிச்சலுடன் வரட்டல், பேசமுடியாமை, கம்மல் பேச்சு என்னும் குணங்கள்
உடையது.
சிலேத்தும குரல்கம்மல் ரோகம் –
குரல் வளைக்குள் கோழை
பூசினதுப் போல் இருத்தல், குறுகுறு வென்ற அற்பசத்தம், கம்மலான வார்த்தை என்னும்
குணங்கள் உடையது.
திரி தோசக் குரல்கம்மல் ரோகம் –
குரல்வளைக்குள்
இறுக்கிப் பிடிப்பது போலிருத்தல், மூன்று தோசக் குரல்கம்மல் களுக்கு உண்டான
குணங்கள் கீச்சுக்குரல், தொனியை மரிப்பது போல் தோற்றம் என்னும் குணங்கள் உடையது.
ஷ்சய
குரல்கம்மல் ரோகம் ---
குரல் வளையில் புகை கம்மிக் கொண்டது
போலிருத்தல் குரல்கம்மல் என்னும் குணங்களுடையது.
மேதோக்
குரல்கம்மல் ரோகம் ---
குரல்வளையில் வலுவளுப்புடன் சிலேத்தும
குரல்கம்மல் குணங்கள் உடையது.
குரல்கம்மல்
ரோக சாத்தியா சாத்தியங்கள் ---
வாத, பித்த, சிலேத்தும சயரோக
குரல்கம்மல்கள் சாத்தியம், திரிதோஷ, மேதோ குரல்கம்மல்கள் அசாத்தியம்.
அரோசகம்
---
அரோசகமானது ஐந்து
வகைப்படும் அவையாவன ------ வாத அரோசகமானது, வாயைத் துவர்ப்பாக்கி ஒக்காளம்
உண்டுபண்ணும், பித்த அரோசகமானது எட்டிக் கொட்டையைப் போல் கசப்பாக்கி கசப்பான
ஒக்காளாம் வருவது போல் செய்யும். சிலேத்தும அரோசகமானது வாயில் தித்திப்பை
உண்டாக்கும் தித்திப்பான ஒக்காளம் வரும் படி செய்யும். சந்நிபாத அரோசகம் மானது
வாயையும் வாயில் ஊரும் சலத்தையும் நானாவித ருசிகலாகவும், ஒருவேளை ருசிகள் ஒன்றும்
தெரியாமலும் அவ்வாறே ஒக்காளம் வருவது போலுமிருக்கும். துக்க அரோசகம் வாயில்
கோழையாகிய சலத்தை மாறாமல் வெளியில் தள்ளும்.
வாந்தி ரோகம் –
வாயில் நீர் ஊறுதல்
அரோசகம், துக்கம், வாயில் உப்புக் கறித்தல் என்னும் குணங்களை தனக்கு ருபமாக பெற்று
இருக்கும். இதற்கு சர்த்த ரோகம் என்றும் வமன ரோகம் என்றும் பேர். இது ஆறுவகைப்
படும்.
வாத வாந்தி ரோக லஷ்சனம் –
வாய்வளறல் மார்புநோய்
தலை நோவு, குரல்கம்மல் இருமல்,இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம் கருத்த
சலமாகவும் நல்ல சலமாகவும் வாந்தி என்னுங் குணங்களுடையது.
பித்த வாந்தி ரோக லஷ்சனம் –
உப்பு நீராகவும், புகை
நிற சலமாகவும், பச்சிலை ரசம் மஞ்சள் ரத்தத் தோடு புளிப்பாகவும் காரமாகவும்,
சுடுகையாகவும், வாந்திதாகம், தேக எரிச்சல் தலை சுழலல், மூர்ச்சை என்னும்
குணங்களுடையது.
சிலேத்தும வாந்தி ரோக லஷ்சனம் ---
வழுவழுப்பாகவும்,
தடிப்பாகவும் கோழையாகவும் நூலை போல கொடி கொடியாகவும் வாந்தி, ரோமச் சிலிர்ப்பு,
முகத்தில் கொஞ்சம் அதைப்பு கோருதல், வாயில் இனிப்பு, மார்பில் துடித்தல், இருமல்
என்னுங் குணங்களுடையது.
திரிதோஷம் வாந்தி ரோக லட்சணம் –
மார்பிலும்
கண்டத்திலும், தலையிலும் நோவு, இருப்பக்கத்திலும் இசிவு, கண்பிதுங்குவது
போலிரித்தல், சர்வாங்கத்திலும் எரிச்சல் அதிதி தாகம் பிரமை, மூர்ச்சை, நடுக்கல்
என்னும் குன்ங்களுடையது இது அசாத்தியம்.
திருஷ்டான்ன வாந்தி ரோக லட்சணம் –
இந்த வாந்தியிலும்
துர்க்கந்தம், அசுசி, துர்நாற்றம் இருக்கும், இதற்கு கண்ணேறு வாந்தி என்று பேர்.
கிருமி வாந்தி லஷ்சனம் –
வாந்தியில் கிருமிகள்
விழுதல், வயிறு நோவு தேகம் நடுக்கல், மார்பு நோவு என்னும் குனங்களுடையாது. இதற்கு
கிருமிச்சம் என்ற பேருண்டு
அசாத்திய வாந்தி ரோகம் ---
மலமாகவும் ரத்தமாகவும்
சீழாகவும், மல மூத்திர நாற்றமாகவும் ரத்த புள்ளிகள் இருப்பதாகவும் வாந்தியாகுதல்,
இருமல் இரைப்பு, திரி தோஷ வானதியின் குணங்கள் இருக்குதல் என்னும் குணங்கள் உடையது.
இது அசாத்தியம்.
மார்பு ரோகம் --
இந்த ரோகமானது ஐவகைப்
படும் இந்த ரோகத்திற்கு இருத் ( இருத் – மார்பு ) ரோகம் என்றும், தமர்வாதம்
மென்றும் பெயர்கள் உண்டு, ருத்திரவாதம் என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.
வாத மார்பு நோவு லசனம் –
மார்பில் குத்தல்,
அதிரல் உடைந்தது போலிருத்தல், மறத்தல், உள்புறமாக ஈரமில்லாது போலிருத்தல்,
அதையிரியம், துர்பலம், பயம், புரளல், பேச்சில் அசங்கிதம், சரீரம் நடுக்குதல்
மூச்சுபிடிப்பு,, தினறாலான, மூச்சு, அற்பநித்திரை என்னும் குணங்களுடையது.
பித்த மார்பு நோவுலசனம் –
மார்பு எரிச்சல் தாகம்
மனதில் பிரமை, மூர்ச்சை, வியர்வை, புளி ஏப்பம், வாந்தி, சுரம், எந்த
பதார்த்தத்தையும் புசிக்க வேண்டும் மென்கிற இச்சை என்னும் குணங்களுடையது.
சிலேத்தும மார்பு ரோக லசனம் –
மார்பை கெட்டியாக
மூச்சு பிடித்தல் போல் ஸ்தம்ப மாக்கி பிடித்தல் பாரங்கல்லை வைத்தது போலிருத்தல்,
இருமல், மந்தாக்கினி, வாயில் கோழை பெருகல், நித்திரை, சோம்பல், அரோசகம் சுரம்
என்னும் குணங்களுடையது.
திரி தோசமார்பு ரோக லஷனம் –
மார்பில் ஈட்டியால்
குத்தல் போல் ஒடி ஒடி குத்தல், பிளத்தது போலிருத்தல், எரிச்சல் கனத்தல், அழுகை,
பிரமை, தாகம், சுரம், வாதாதி மூன்று மார்பு நோவுகளின் துர் குணங்களை ஒரே காலத்தில்
உண்டாக்கும் இது கஷ்ட சாத்தியம்.
கிருமி மார்புரோக லட்சணம் – கிருமிகள் இதயஸ்த்தானத்திற்கு மேல்
எதிர்த் தேறுவதினால் மார்பில் துடிதுடித்தலுடன் அதரல், வீக்கம் அதிக நமைச்சல்,
தெறித்து விழுவது போலும் வாலாறுப் படுவது போலும் இருக்குதல் கண்கள் கருப்பாக
தோற்றால், இருட்டிக் கொள்ளல், கோழை விழுதல் என்னுங் குணங்களுடையது.
இந்த ரோக மானது சுவாசம்
வரும் மார்கத்தை யடைத்து அகலா மரணத்தையும் உண்டாக்கும். அதிக விரைவில் கிருமிகள்
விழும்படியாக கசப்புள்ள விரோசனங்கள் கொடுக்க வேண்டும்.
சாத்தியா சாத்தியங்கள் –
வாத, பித்த, சிலேத்தும
மார்பு நோய்கள் சாத்தியம், திரிதோஷ மார்பு நோய் கஷ்ட சாத்தியம், கிருமி மார்பு
நோய் அகத்தியம்.
அனுபவைத்திய தேவரகசியம் என்னும்
---
மருத்துவ நூலில் பிரதம காண்டத்தில் –
ரத்த பித்த ரோகம், அசிர்க்கர ரோகம், காசரோகம் சுவாச ரோகம், சய ரோகம்,
குரல்கம்மல்ரோகம் , மார்பு ரோகம் என்னும் ரோகங்கள் அடங்கிய மூன்றாவது வர்க்கம்
சம்பூரணம்.
அனுபவ வைத்தய தேவரகசியம் – முதற்காண்டம் – நான்காவது
வர்க்கம் தாக ரோகாதிகள்
தாக ரோக லஷ்சனம் --- இந்த ரோகமானது மனதுக்கு
பிரமை உண்டாக்குதல், நடுக்கல், தேகத்தில் எரிச்சலோடு காங்கை, சோருதல் தாகம், நாவின்
மூலத்திலும் கண்டத்துக்கு உள்ளும் குலோமத்திலும் தாடை ( குலோமாம் – என்பது வலது
பக்கத்து ஸ்தானத்தில் கீழ்சலம் இறங்கி
நிற்கும் இடம்) இருக்கின்ற நரம்புகள் உலறல் எவ்வளவு நீர் அருந்தினாலும்
பூர்த்தியடையாமை அன்னத்துவேசம், குறள் கம்மல், இளைப்பு, பிரலாபம், மனக் கெடுதி
மலம் நழுகல் என்னும் குணங்களுடைய பழைய ரூபமாக பெற்றிருத்தல்.
தாக ரோகங்களின் லசனம் –
வாத தாக ரோக லசனம் –
அதயிரியம்,
இளைப்பு, தலை நோவு அரோசகம், காது மந்தம் நித்திரையும் பலமும் குன்றல், தாகம்
அதிகரித்தல், என்னும் குணங்கள் உடையது.
பித்தரோக லசனம் –
மூர்ச்சை
வாய்கசப்பு, கண்கள் சிகப்பு, மிகவும், நாவுலறல், வாயில் புகை எழல் என்னுங்
குணங்களுடையது.
சிலேஷ்ம தாக ரோக லட்சணம் –
நெஞ்சில்
முள்சொருகுதல் போல் இருத்தல் நித்திரை, வாயினிப்பு, வயிறு உப்பிசம் தலை
தேகமரத்தல், வாந்தி, அரோசகம், சோம்மல், அஜீரண ரோக குறி என்னும் குணங்கள் உடையது.
திரி தோஷ தாக ரோக லட்சணம் –
வாதாதி
தாக ரோக குனகள் எல்லாம் உடையது.
ராசா சய தாக ரோக லட்சணம் –
நாக்கு
உலறல், மதி பிரமை, தேகஞ்சுட்கல், இளைப்பு, எந்த கந்தத்திலும் அசங்கிதம் ( கந்தம் –
வாசனை) என்னும் குணங்கள் உடையது.
உப சர்க்க தாக ரோக லட்சணம் –
தித்திப்பு,
உப்பு முதலிய வஸ்த்துக்களை பிரமானந்தப்பி சாப்பிடுதல் களைத்த காலத்திலும், சோர்வு
அடையும் காலத்திலும் தாபச்சுர காலத்திலும் நெடுநாளாக பற்றிய ரோகங்களின் விஷம
காலத்திலும் தாக ரோகம் பிறக்கும்.
அசாத்திய தாக ரோக லட்சணம் –
அறிவழிந்த
காலத்திலும் நாவானது பயன் படாமல் ராகத்தால் வெளியில் நீண்டு விட்ட காலத்திலும்,
வாயிக்குள் உண்டான ராகத்தால் தொண்டைக்குள் சலம் இறங்காத காலத்திலும் தாக ரோகம்
உண்டானால் அசாத்தியம்.
மதாத்திய ரோக லட்சணம் –
சுக்கிலம்,
காமாசலம், பலம் கொழுப்பு, முதலிய வைகளுக்கு மதம் என்று பேர், இதுகளை நாசம்
பண்ணுங்கால், மாதத்திய ரோக லட்சணம் உண்டாகும் அப்பொழுது சோருதல் நானாவிதமான மலம்
நலுகள், இடைவிடாத தாக உஷ்ண சுரம், அரோசிகம், மார்பிலும் சிரசிலும், தோள்களிலும் விலாப்பக்கங்களிலும்,
மர்ம ஸ்தானங்களிலும் தொண்டையிலும் அதிகநோவு நடுக்கல் கல் அடைத்துக் கொண்டதுப் போல்
மார்பில் அடைப்பு கண்களில் இருள்கம்மல், இருமல் இரைப்பு, நித்திரை பங்கம், வியர்வை
ஒருவேளை மலபந்தம், வீக்கம், சித்தபிரமை, பிரலாபம், வாந்தி, மார்பில் சங்கடம்,
மயக்கம், துர்ச் சொப்பணம் என்னும் குணங்களுடையது. இந்த ரோகமானது வாதாதி தோஷங்களை
அனுசரித்து நான்கு பேதங்களாயிருக்கிறது. மேல் கூறிய குணங்களை தோசத்திற்கு தக்கவாறு
அடைந்து இருக்கிறது.
தும்மிச்சக விஷய ரோக லஷ்சனம் ---
நாள்
தோறும் சாதாரண பழக்கமாய் புசிப்பவவைகளை விட்டு சாராயத்தையும் இடை விடாது அதிகமாய்
அருந்துவர்களுக்கும் தும்மிச்சகம் விஷயம் மென்னும் இரண்டு வியாதிகள் உண்டாகின்றன.
தும்மிசக ரோகலட்சனம் –
வாயினால்
கோழை கோழையாக கக்கள், வார்த்தை கேட்க அசங்கிதப்படுதல், நெஞ்சுஉலறல் அதிகநித்திரை
சோம்பல் என்னுங் குணங்களுடையது. இது தேகத்தை சீக்கிரம் நாசப்படுத்துவதினால்
தும்மிச்ச ரோகம் எனப் பேர் பெற்றது.
விஷய ரோக லஷ்சனம் ---
தேகம்,
சிரசு, மார்பு அதிக நோவு கண்டத்தை நெறுக்கிப் பிடித்தது போலிருத்தல். சோருதல்,
இருமல், தாகம்,வாந்தி, சுரம் என்னும் குணங்களுடையது.
மத ரோக லஷ்சனம் ---
மதத்தை
உண்டாக்குவது மத ரோகம் என்று பெயர். இது எழுவகைப் படும் அவையாவன –
வாத மத ரோக லஷ்சனம் –
ஈனதொனி,
இடைவிடாத வார்த்தை ஒன்றிருக்க ஒன்று செய்கின்ற கெட்டநடத்தை, தேகத்தில் கருத்த
நிறம் அல்லது சிவந்த நிறம் என்னும் இக் குணங்கள் உடையது.
பித்த மத ரோக லட்சணம் –
தேகமானது
மஞ்சள் அல்லது சிகப்பு நிறமாக பேதிக்குதல், கோபம் கலகப்பிரியம் என்னும் குணங்கள்
உடையது.
சிலேத்தும மத ரோகலட்சனம் –
தியானம்
செய்பவர் போலிருத்தல், ஒன்றுக் கொன்று சம்மந்தம் இன்றி அதிக விரைவாக பேசுகின்ற
வார்த்தை தேகம் வெளுத்தல் என்னும் குணங்கள் உடையது.
சந்நிபாத மத ரோகலட்சனம் –
வாதாதி
முதலான மூன்று மத ரோகங்களின் குணங்கள் ஏககாலத்தில் உண்டாகும். இது அசாத்தியம்.
இரத்த மத ரோக லட்சணம். –
தேகமுங்
கண்ணும் மரத்தலுடன் பித்த மத ரோக குணங்களை உண்டாகியிருக்கும்.
மத்தியபான மத ரோகம் –
சரீரத்தில்
பலவித கெடுதி முகத்தில் ஒளி நீங்குதல், தொனிகெடல் எவர்களிடத்திலும் நிராசை என்னும்
குனங்களுடயது.
விஷமத ரோக லட்சணம் –
மேற்கூறிய
மத குனங்களைவிட அதிகமான துர்குணங்கள் உடையது. நடுக்கல் மிகு நித்திரை உடையது.
இவ்வேழு மத ரோகங்கள் ரத்த பித்த ரோகங்களின் குணங்களை எல்லாம் உண்டாயிருக்கும்.
மூர்ச்சாரோகம் –
மூர்ச்சை
ரோகமானது ஐவகைப்படும் அவையாவன –
வாத மூர்ச்சா ரோகலட்சனம் –
ஆகாயத்தைப்
பார்த்தால் கருப்பு வர்ணம் போல் தோற்றி மூர்ச்சையை உண்டாகி உடனே தெளியும், இதனால்
மார்பு நோவு, நடுக்கல், பிரமை என்னும் குணங்களுடையது தேகம் இளைக்கும் அப்போது
சரீரம் கருத்து அல்லது சிவந்து இருக்கும்.
பித்த மூர்ச்சாரோகம் –
ஆகாயத்தைப்
பார்த்தால் மஞ்சள் வர்ணமாயும், சிகப்பு வர்ணமாயும், தோற்றப்பட்டு மூர்ச்சை உண்டாகி
உடனே தெளியும், பின்பு இதனால் தேக எரிச்சல் காங்கை தாகம். வியர்வை, துண்டு துண்டாக
மலம் நழுகள் தேகம், மஞ்சள் வர்ணம் அல்லது கருப்பு வர்ணம் இரண்டு கண்ணால் கலங்கி
மஞ்சள் அல்லது சிகப்பு வர்ணம் என்னும் குணங்களுடையது.
சிலேஷ்ம மூர்ச்சா ரோக லட்சணம் –
ஆகாயத்தை
பார்த்தால் மேகங்கள் கம்மினால் போல் தொடரப்பட்டு மூர்ச்சை உண்டாகி நெடு நேரம்
பொறுத்து தெளியும். இதனால் மார்பதிறல் வாயில் சலம் வடிதல் அவயவங்கள் எல்லாம்
அசைக்கக் கூடாமையாக நனைந்து தடித்த சருமத்தைப் பொத்திக்கொண்டது போல் சரீரம்
கனத்திருக்குதல் என்னும் குணங்கள் உடையது.
திரிதோஷ மூர்ச்சா ரோக லட்சணம் –
மேற்கூறிய
வாதாதி மூர்ச்சா ரோக குணங்கள் எல்லாம் உடையது. கோர சேட்டையுண்டாகி அபஸ்மார
ராகத்தைப் போல் இந்திரியம் வியாபாரங் கெட்டு மூர்ச்சை உண்டாகும்
சந்நியாசி ரோக லட்சணம் –
திரி
தோசங்கள் பிரானான் தானங்களில் அதிகரித்து சந்நி பாதமாகி மனம் வாக்கு காயம் என்கிற
திர கரணங்களின் செய்கைகள் சபிக்கவிட்டு தானும் அடங்கி சந்நியாசி ரோகத்தை
உண்டாக்கும். அப்போது இந்த ரோகி வெட்டி முறித்த மரத்தைப் போல் விழுவான். உயிரிருந்தால்
உயிரில்லாது போல் சவத்தை போல் கிடந்து இறந்து விடுவான்.
மூலரோக லட்சணம் ---
ஆசன
வளையங்களில் கிழங்கு முளைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளைப்
பெற்றிருக்கும் காரணத்தால் மூலரோகம் எனப் பெயர் பெற்றது. இந்த ரோகம் தாய் தந்தையர்
வழியாகவும் உண்டாகும். கொடிய காங்கை வஸ்த்துக்கள் கடி வஸ்துக்கள் முதலியவைகளால்
சுபாவத் தேகத்தில் பிறப்பது உண்டு.
இந்த
ரோகத்தால் அக்கினிமாந்தம், மலபந்தம், அடித்தொடைச் சதையிலும் கணுக்கால் கெண்டைச்
சதையிலும் அதிக நோவு, ஆயாசம், உடம்பிளைத்தல், கண் அதைப்பு பேதி அல்லது மலக்கட்டு,
ஆசனத்தில் நோவு அபான வாயுபரிதல் இளைப்பு, ஏப்பம் சிலவேலை புளி ஏப்பம் அல்லது விசேச
ஏப்பம், நீரிரங்கள், சொற்ப மலம் நழுகல் எந்த காரியத்திலும் புத்தி செல்லாமை, சிரசு
முதுகு மார்பு என்னும் இடங்களில் குத்தல், சோம்பல், கோபம், கிராணி மகோதரம் என்னும்
குணங்கள் உடையது.
சகசமூலம்( சாகசம் – உள்பிறப்பு ) ரோகம் ---
மூலரோகமானது
கடினாமாகவும் யாரேனும் பார்க்கக் கூடாமையாகவும் உள்ளுக்குள்ளே முகங் காணப்பட்டு
வெண்மையாய் அதிக உபத்திரவத்தை உண்டாக்கும்.
உத்தரச மூலரோகம் ---
உஷ்ணத்தினால்
பிறந்த சீதளம், அழலை, கிரந்தி, சகிக்கக் கூடாத உஷ்ணம் மிகு சையோகம், கோபத்தை
சகித்தல் அதிக உப்பு வஸ்த்து காரண வஸ்த்து இவைகளினால் பிறந்தது, பலவிதமான முலைகளை
கொண்டு உபத்திரவங்களை உண்டாக்கும்.
சுட்க மூல ரோகம் ---
முளையானது
சுருங்கிக் கொண்டு நோவையுண்டாக்கும்.
ஆர்த்திர மூலரோகம் ----
எந்த
நேரமும் ரத்த முதலிய கசிவை உண்டாக்கும். இது இரத்தத்தினாலும் பிறக்கும்
வாத மூல ரோக லட்சணம் –
முளைகள்
உலர்ந்தும் வாடியும் நெரித்தும் பரபரப்புடன் சிவந்தும் கருத்தும் மேடு பள்ளமாகவும்
கடினமாகவும் கரகரத்தும் நெருங்கியும் முளை கூர்மையாகவும் இருக்கும்.
பித்த மூலரோக லட்சணம் –
முளைகள்
சிவந்து நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும், காந்தியாகவும், வெண்மையாகவும், கருத்த
மெல்லிய தாகவும், கொஞ்ச ரத்தத்துடன் துர்கந்தமாகவும், கொஞ்சம் மிருதுவாகவும், அசையப்
படுவதாகவும் இருக்கும். அம் முளைகள் மாமிச கண்டம் அட்டை முகம் இவைகளை ஒத்து
இருக்கும் தாகம், சீரணம், சுரம், வியர்வை, உதடு உலறல் மூர்ச்சை அரோசகம், என்னும்
குணங்களுடையது.
சிலேஷ்ம மூலரோக லட்சணம் –
முளைகள்
பெருத்து ஆழ்ந்த வேருள்ளதாகவும், மினுமினுப்பாகவும், வட்டமாகவும் கனத்ததாகவும்,
எண்ணைக் கசியாகவும், நீங்காத வழுவழுப்பு உள்ளதாகவும், அற்ப நோவு, நமச்சல் சொறி அம்
முளைகள் மூங்கில் முளை, பலா பிஞ்சு, எழும்பு, திராட்சைப்பழம் இவைகளை
ஒத்திருக்கும். இந்த ரோகிக்கு இரண்டு கவுட்டியிலும் உப்பல், குதஸ்த்தானத்தில்
அடிவயிற்றிலும், தொப்புளிலும் அறுப்பது போல் நோவு, இருமல், இரைப்பு, தலைநோய்,
குளிர் சுரம் விந்து நஷ்டம், பீனிசம் சோர்வு, ஒழுக்கு மூத்திரம், அஜீரணம்,வாந்தி
முதலிய குணங்களைப் பெற்று இருக்கும்.
தொந்த மூலரோக லட்சணம் –
முளைகலாயும்,
வாத சிலேத்தும மூல குணங்கள் உண்டாயிருக்கும்.
திரி தோஷ மூல ரோக லட்சணம் –
மேற்கூறிய
திரி தோஷ மூல லஷனங்க்களை உண்டாயிருக்கும்.
No comments:
Post a Comment