Thursday, 30 October 2014

ரோகங்களின் அட்டவணை - 4

முதற்காண்டம் ரோகங்களின் அட்டவணை - 4
1.        இரத்த மூலரோகம்
2.        மூலரோக சாத்தியா சாத்தியங்கள்
3.        அசாத்திய மூலரோகம்
4.        உதாவர்த்த ரோகலட்சனம்
5.        சரும கீலரோகம்
6.        வாத சரும கீல ரோக லட்சணம்
7.        பித்த சரும கீல ரோக லட்சணம்
8.        சிலேத்துமசருமகீலரோகலட்சணம்
9.        அதிசார ரோகலட்சனம்
10.     வாத அதிசார ரோக லட்சணம்
11.     பித்தாஅதிசாரரோகலட்சணம்
12.     சிலேத்தும அதிசார ரோகலட்சனம்
13.     திரிதோஷ அதிசார ரோக லட்சணம்
14.     பயா அதிசார ரோகலட்சனம்
15.     துக்காதிசார ரோகலட்சனம்
16.     நிராம அதிசாரரோக லட்சணம்
17.     சாமாதிசாராரோக லட்சணம்
18.     ரத்தாதிசார ரோகலட்சனம்
19.     கிராநிரோக லட்சணம்
20.     உஷ்ணவாயு கிராநிரோகலட்சனம்
21.     அந்தரவாயு கிரானிரோக லட்சணம்
22.     மூலவாயு கிராநிரோக லட்சணம்
23.     குன்மகிரகனி ரோகலட்சனம்   
24.     கருப்பக் கிரகணி ரோகலட்சனம்
25.     ஒட்டுக் கிரகனிரோக லட்சணம்
26.     சங்கர கிரகணி ரோக லட்சணம்
27.     சாத்திய அசாத்திய கிரகணி ரோக லட்சணம்
28.     அஷ்ட மகா ரோகங்கள்
29.     அலசரோகம்
30.     ஆமலசக ரோகலட்சனம்
31.     தன்டாலசக ரோகலட்சனம்
32.     விஷாலசக ரோகலட்சனம்
33.     விஷுசி ரோகலட்சனம்
34.     வாத விஷுசி ரோகலட்சனம்
35.     பித்த விஷுசி ரோகலட்சனம்
36.     சிலேத்தும விஷுசி ரோகலட்சனம்
37.     அஜிரன் ரோக பேதம்
38.     ஆமா அசீரண ரோகலட்சனம்
39.     விதக்த்தர அசீரண ரோகலட்சனம்
40.     விஷ்டம்பா அசீரனரோக ரோகலட்சனம்
41.     விளம்பிகா அசீரனரோக லட்சணம்
42.     ரசசேஷா அசீரண ரோகலட்சனம்
43.     உற்சுகா அசீரண ரோகலட்சனம்
44.     சாமானிய அசீரண ரோகலட்சனம்
45.     தூமா அசீரண ரோகலட்சனம்
46.     விதூம அசீரண ரோகலட்சனம்
47.     விஷ்பஷ்ட்டம்பா அசீரனரோகலட்சனம்
48.     ரசசேஷ அசீரண ரோகலட்சனம்
49.     வாதா அசீரண ரோகலட்சனம்
50.     பித்த அசீரண ரோகலட்சனம்
51.     சிலேத்ம அசீரண ரோகலட்சனம்
52.     அசீரனே பவன்திரவங்கள்
53.     அசீரண ராகத்திற்கு முக்கியகாரனங்கள்
54.     அனுபவைத்திய தேவரகசியம் முதற்காண்டம் ஐதாவது வர்க்கம்
55.     மூத்திர காதார ரோகபெதங்கள் – மூதிரகாத ரோகங்கள்
56.     கிரிச்சுற ராகத்தின் பேதங்கள்
57.     வாத கிரிச்சர ரோகம்
58.     பித்தக் கிரிசுர ரோகம்
59.     சிலேத்தும கிரிச்சுர ரோகம்
60.     திரிதோஷ கிரிச்சுர ரோகம்
61.     அஸ்மரிரோகம்
62.     வாதாச்மரி ரோகம்
63.     பித்தாஸ் மரிரோகம்
64.     சிலேத்துமஸ் மரிரோகம்
65.     சுக்கிலாஸ் மரிரோகம்
66.     மூத்திர தோஷம்
67.     சங்க வாத அஸ்திரோகம்
68.     பிந்துவாத வாஸ்திரோகம்
69.     மேக ரோக பேதம்
70.     மேக ரோகலட்சனம் 


குறிப்பு ---
இரத்த மூலரோக லட்சணம் –
        இரத்தம் கசிவதால் ரத்த மூலம் என்று பேர். ,
இது  தவிர வாத பித்த, வாத சிலேத்துமம், பித்த சிலேத்துமாம்,மூலங்கள், திரிதோஷ, தொந்தத்தால் உண்டாயிருக்கின்றன,
மேலும் முளைகள் இருக்கும் இடங்களை அனுசரித்து பலவாரான பெயர்களால் வழங்கி வருகின்றன. அவைகளாவன ---
மூலரோக முளைகள் உள்ளிருந்தால் உள் மூலம் என்றுபேர்.
முளைகள் வெளிப்பட்டு இருந்தால் வெளிமூலம் என்றுபேர்.
முளைகள் செண்டு போலிருந்தால் செண்டு மூலம் என்றுபேர்.
முலைகளோடு சீழ் வடிந்தால் சீழ் மூலம் என்றுபேர்.
முளைகளோடுரத்தம் கசிந்தால் ரத்த மூலம் என்றுபேர்.
முளைகளோடு சலம் கசிந்தால் சலமூலம் என்றுபேர்
முளைகள் ஆணிபோல் கடினமாக இருந்தால் ஆணிமூலம் என்றுபேர்.
முளைகள் கிரந்தியுடன் இருந்தால் கிரந்தி மூலம் என்றுபேர்.
இந்தப் பிரகாராம் சில வடமொழி நூல்களிலும் தென்மொழி நூல்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது.                    
மூலரோக சாத்தியா சாத்தியங்கள் –
        குதஸ்த்தானத்திற்குள் அடி வளையம், நடுவளையம், மேல்வளையம், என மூன்று வளையங்கள் இருக்கின்றன, அடிவளையத்தில் திரி தோஷங்களால் முளைகள் உண்டானால் அசாத்தியம், நடு வளையத்தில் துவந்த தோஷத்தினால் முளைகள் உண்டாகி சாத்தியமாவது போலாகி வருடந்தோறும் கண்டுமரைவதாய் இருக்கும். மேல் வளையத்தில் ஒவ்வொரு தோசத்திதினால் உண்டான முளைகள் அதி சீக்கிரம் சாத்தியமாகும்.
அசாத்திய மூலரோகம் ---
        எந்த மூலரோகிக்கு கை, கால், நாபி, ஆசனம், பீஜம், முகம் என்னும் இடங்களில் வீக்கம் உண்டானால் மரணம் வாய்க்கும் என்று அறியவும்.
உதாவர்த்த மூலரோக லஷ்சனம் –
        குதத்தில் நோவையும் மலபந்தம் மூத்திர சிக்கலோடு வெகு உபத்திரவத்தை உண்டாக்கும். இது மூலரோகங்களுக்குள் மிகுதியுடன் உபவத்திரம் செய்யும் மிகவும் கொடியது. இந்த ரோகத்தினால் தேகம் மிகவும் மெலிந்தும் அதி உபத்திரவத்துடன் வயிறு பருத்தும் கண்கள் குளிவிளுந்தும் இருந்தால் மிகவும் அசாத்தியம் என்று அறிக. மேல் கூறிய கெட்ட குணங்கள் இல்லாதிருந்தால் சாத்தியம்.
சருமகீலரோகம் –
        குதஸ்தானத்தை சுற்றிலும் சருமத்தின் மேல் வாசியைப் போல் உறுதியாகவும், கரகறப்பாகவும், சிறு சிறு ஆணிகளைப் போல் முளைகளை பிறப்பிக்கும். இது வாதாதி தோஷங்களினால் மூன்று வகைப்படும், இது வாதாதி தோசங்களினால் மூன்று வகைப்படும் அவையாவன ---
வாத சரும கீலரோக லஷ்சனம் –
        முளைகள் பருத்து கெட்டியாயும் நோவை யுடையவையாயும் இருக்கும்.
பித்த சரும கீலரோக லஷ்சனம் –
        முளைகள் கருத்தும், சிவந்தும் உபவத்திரவத்தைக் கொடுக்கும்.
சிலேஷ்ம சரும கீலரோக லஷ்சனம் –
        முளைகள் வழுவழுத்து ஊசியால் குத்துவது போல் குத்தலை தருவதுவாய் இருக்கும். இவைகளுக்கு அதி சீக்கிரத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி செய்யாவிடில் அம் முளைகள் அபான வழியை அடைத்து மலபந்தத்தையும் வயிறு பருத்துலையும் உண்டாக்கும். இன்னும் பலவித உபத்திரவங்களும் உண்டாகும்.
அதிசார ரோக லஷ்சனம் –
         நோயால் இளைத்த மிருகமாமிசம், கெட்டு உலர்ந்த மாமிசம், வெந்தும் வேகாத பதார்த்தங்கள், புண்ணாக்கு முதலிய மந்த வஸ்த்துகள் கள்ளு கஞ்சா சாராயம் குடித்தல், காரவஸ்த்து வயிற்று வலி கிருமி நிறைவு அபானவாயு, தும்மல், மலம், மூத்திரம், கொட்டாவி, பசி, தாகம் இருமல், நித்திரை, கண்ணீர் சுக்கிலம், வாந்தி இளைப்பு என்னும் பதினாலு வேகத்தையடகுதல், இவைகளால் வாயு அதிகரித்து சப்த தாதுக்களையும், உதாக்கிநியையும் கெடுத்து மலப்பையில் சேர்ந்து கொண்டு கெட்டியாயிருக்கிற மலத்தை சலமாகக் கரைத்து அபான வழியில் ஒழுகப் பண்ணும். இது மார்பு, குதம் வயிறு இவிடங்களில் நோதல் உடம்பு இளைத்தல், அசீரணம் என்னும் குணங்களுடையது.
வாத அதிசார ரோக லஷ்சனம் –
பறபற வென்னும் இறைச்சல்லையும் நோயையும் உண்டாக்கி பேதியாகிறது. நுரையோடு துண்டு துண்டாக மலம் விழுதல், பசையற்று ஆசனம் காய்ந்தது போல் தோற்றால், கத்தியால் அருப்பட்டது போல் நோவு கொஞ்சம் சீதஞ்சுற்றிக் கொண்டதாய் மலம் நழுவுதல் வயிற்றில் பொருமலுடன் நோவு, சூலை, அடிவயிற்றில் பிடுங்கல், சிலவேலை பேதியானது மஞ்சளாயும் கருபாயும், வெளுப்பாயும் துர்க்கந்தத்துடன் பேதியாகும். புளி ஏப்பம் வாந்தி என்னும் குணங்கள் உடையது.
பித்த அதிசார ரோக லட்சணம் –
        மலமானது பல நிறத்துடனும் எண்ணெய் கலந்ததாகவும் நுங்குபோல் கொடி கொடி யாகவும் அதிக வெண்மையாகவும் மினுமினுப்பாகவும் அசீரணப் பட்டதாகவும் பொறுத்து பொறுத்து வருவதாகவும் துர்கந்தமாகவும் ஆசனத்தில் மிகுந்த பளுவை உண்டாக்கி பெதியாகுதல் அதிக நித்திரை சோம்பல் அன்னத் துவேசம், ஆசனத்திலும் அடிவயிற்றிலும் மேல் வயிற்றிலும் கனத்தல் கப ஆதிக்கம் தும்மல் நீரடைத்தல் என்னும் குணங்கள் உடையது.
திரி தோஷ அதிசார ரோகலட்சனம் –
        வாதாதி மூன்று தோஷங்களில் உண்டாகிற உபத்திரவங்கள் உண்டாகுதல் சந்நிபாத சுரலட்சனம் அடைந்திருக்கும்.
பய அதிசார ரோகலட்சனம் –
        பயத்தினால் சலஞ்சலமாகவும் பேதியுண்டாகும் திரிதோஷ குணங்களை உண்டாய் இருக்கும்.
துக்க அதிசார ரோகலட்சனம் –
        துக்கத்தினால் உண்டாகும் பேதிக்கு துகாதிசாரம் என்றுபேர், இதன் மேற்கூறிய குணங்கள் உண்டாயிருக்கும்.
நிராம அதிசார ரோக லட்சணம் –
        மேற்கூறிய ஆறுவகைக்கு நிராம அதிசார ரோகம் என்று பெயர்
சாமா அதிசார ரோக லட்சணம் –
        செரியாமல் பேதியாகுவது சாமா அதிசாரம் இந்த ரோகத்தில் மலமானது மந்தத்துடன் துர்க்கந்தமாகவும் பேதியாகுதல் வயிற்றில் நோவு வாயில் நீர் ஊறுதல் என்னுங் குணங்கள் உடையது. இதனை அசீரணபேதி என்றும் சொல்லுவார் சிலர்.
ரத்தா அதிசார ரோக லட்சணம் –
        ரத்தத்துடன் கலந்து பேதியாகுதல் ரத்தாதிசார மென்று பேர். தாகம் வயிற்று நோவு, ஆசனம் வெளிப்படுதல் சரீர எரிச்சல் என்னுங் குணங்கள் உடையது.
கிராகனி ரோக லட்சணம் –
        அதிசார ராகத்தைப் போலவே ஜீரனாதி ஜீரண காலங்களில் சுபாவ மலமாகவும், சீதங்கலந்த மலமாகவும், செரித்தாகவும், செரியாத்தாகவும் காரணமில்லாமல் கட்டுப் பட்டதாகவும் நானாவித நிறமாகவும் அடிக்கடி விஷேச மலமாகவும் பேதியாகும். இதற்கு கிராணி அல்லது கிரகணி என்று பேர் மலமாக பேதியகில் கழிச்சல் என்றும் சீதமாக பேதியாகில் சீதக் கழிச்சல் என்றும் ரத்தமாக பேதியாகில் ரத்தக் கழிச்சல் என்றும் பேர் சலமாக பேதியாகில் சலக் கழிச்சல் என்றும் பேர்.
        மேலும் இந்த ரோகத்தில் உடம்பு இளைத்தல் கண்டத்துக்கு புகை கம்மியது போலிருத்தல், மயக்கம் சுரம் மூர்ச்சை, தலை நோவு, மலபந்தம் கைகால் வீக்கம் என்னும் குணங்களுடையது.
        இந்த கிரகணி ரோகம் பித்த கிரகணி, சிலேத்தும கிரகணி, என நான்கு வகைப்படும். இது தவிர சில வைத்திய கிரந்தங்களில் உஷ்ணவாயு கிரகணி, அந்தர வாயு கிரகணி, மூலவாயு கிரகணி, குன்ம கிரகணி, கருப்ப கிரகணி, ஒட்டு கிரகணி, சங்கர கிரகணி என எழுவகை கிரகனிகள் காணப்படுகிறது. அவைகளின் லட்சனம்மாவது –
உஷ்ணவாயு கிரகணி ரோக லட்சணம் –
        வயிற்றில் கனத்தலுடன் உப்பிசம், இரைச்சல், கைகால் அசதி தேகங் கருகி மெலிதல், பேதி என்னும் குணங்களுடையது.
அந்தர வாயு கிரகணி ரோகலட்சனம் –
        புசித்தவுடன் பேதியாகுதல், இரைச்சல், அசதி, தாகம், தளர்ச்சி விழாவில் இசிவு, சரீர வெளிறல், விக்கல் என்னும் குணங்கள் உடையது.
மூலவாயு கிரகணி ரோகலட்சனம் –
        இரைச்சலுடன் வயிற்றை புரட்டல், அடிவயிறு பொருமல், மலம் வரளல், மந்தம், அடித்துடையில் குத்தல், சரீரம் தளரல், குதத்திலும் கண்ணிலும் முளைப் போல் கானல், என்னும் குணங்கள் உடையது.
குன்ம கிரகணி ரோகலட்சனம் –
        வயிற்றில் குத்தல், அதிக உறக்கம், வியர்வை, தலை நடுக்கல், தேக எரிச்சல், உழலை, வயிறு பொருமி, இறைந்து பேதியாகுதல், ஒருபக்கத்தில் இரைச்சல் என்னும் குணங்கள் உடையது.
கருப்பக் கிரகணி ரோகலட்சனம் –
        பேதி, கடுப்பு, கைகால் வற்றல், ஓச்சல், கண்ணில் மஞ்சள் நிறம், பல வித கழிச்சல் அதிக தாகம், சாப்பிட்டால் வாந்தியாக்குதல் என்னும் குணங்கள் உடையது.
ஒட்டுக் கிரகணி ரோகலட்சனம் –
        படுக்கையே இல்லாதாகத் தோன்றல், இளைப்பு, வயிற்றில் அதிகநோவு, மார்பிலும், விலாவிலும் முதுகிலும் வலித்தல், மலமானது ஒரே தடவையில் இறங்காமல் துட்டிடையாக இறங்காமல், தொப்புள் வளையும் போல் சுரங்கள் என்னுங் குணங்கள் உடையது.
சங்கராகினி ரோகலட்சனம் –
        வயிறு பொருமல், செரியாத கழிச்சல், அபானத்தில் கடுகையுடன் எந்நேரமும் நமைதல், சிறு வியர்வை, உக்கிரமான சுரம், மலக்கெடுதி, நெஞ்சிற் கபாதிக்கம், இரு கண்களும் சொரிதல் என்னுங் குணங்களுடையது.
சாத்திய அசாத்தியக் கிரகணி ரோகலட்சனம் –
        வாத கிரகணி பித்த கிரகணி, உஷ்ணவாயு கிரகணி, அந்தர வாயு கிரகணி, மூலவாயு கிரகணி, கருப்ப கிரகணி, ஒட்டுக் கிரகணி, இவைகள் சாத்தியம் மற்றவைகள் அசாத்தியம்.
அஷ்ட மகாரோகங்கள் –
        வாத ரோகம், கல்லடைப்பு ரோகம், குஷ்ட ரோகம், மேகரோகம், மகோதரம், பகந்தரம், மூலரோகம், கிரகநிரோகம், ஆகிய இவ் எட்டு ரோகங்கள் மகாரோகங்கள் என்று பூர்வ ஆயுர்வேத பண்டிதரால் வடமொழியிலும் தென் மொழியிலும் எழுதப்பட்டு இருக்கின்றது. இவைகள் எளிதில் வசப்பட மாட்டாது .அவிடத ஜப ஹோமங்களினால் நீங்கும். என்று அறிய வேண்டியது.
அலசரோகம் –
        அலசம் என்பது – மந்தம் இது மூன்று வகைப்படும் அவையாவன –
ஆமா அலசகரோக லட்சணம் –
        பிரமாணம் தப்பி மென் மேலும் புசிக்கும் மனிதனுக்கு புசித்த அன்னமானது வாந்தியாகமலும், பேதியாகாமலும், ஜீரனிக்காமலும் ஆமமாகிய சிலேஷ்மத்தில் பிசறிக் கொண்டு மிகு வேதனை உண்டாக்கும்.
தண்டால அலசகரோகம் லட்சணம் –
        திரி தோஷமானது மிகவும் அதிகரித்து ஜீரனியாமலும் இருக்கும். அன்னத்தைக் கொண்டு நரம்புகளுக்கு பிகு வெற்றி நரம்புகளை குறுக்காக பாச்சி தந்திகளை சுற்றி இருக்குவதுப் போல இறுக்கி சரீரத்தை தண்டத்தைப் போலவே நீக்கி விடும். இது அதிசீக்கிரத்தில் கொல்லும்.
விஷாலசகரோக லட்சணம் –
        அட்பக்குவமான அன்னத்தை போஜனத்திற்கு மேல் புசித்தால் அஜீரண ஆகும். இதில் விஷ குணங்களைப் போல் மகா ரோகங்களுண்டாய் இருக்கும்.
விஷுசிரோகலட்சனம் –
        வயிற்றில் இரைச்சல், மடை திறந்தது போல் சுத்த சலமான பேதி தொண்டை வரளல் அதிதாகம், பிசு பிசுப்பான வியர்வை, நடுக்கல்கள் குளிவிலுதல் சரீர நிறமாறல் ஈனத் தொனி என்னும் குணங்களுடையது. விஷுசி – பேதி, இது மூன்று விதப்படும். இது மூன்று விதப்படும். அவையாவன –
வாத விஷுசி ரோக லட்சணம் –
        வயிற்றுப் பொருமல், பேதி பிரமை, நடுக்கல், தேகமறத்தல், ஊசியினால் குத்துவது போல் குத்தல், வயிற்றில் இரைச்சல், தேகங்கருத்தல், விழித்திருந்த படியே இருத்தல், குடல் குமுறலுடன் புரட்டல். என்னும் குணங்கள் உடையது.
பித்த விஷுசி ரோக லட்சணம் –
        சுரம், பேதி, உளிரைச்சல், காங்கை மறத்தல், தேகம் சோம்பல், மூச்சை, விக்கல், பித்தம் வாந்தி மயக்கம், பிரலாபம் என்னும் குணங்களுடையது.
சிலேத்தும விஷுசி ரோகலட்சனம்  --
        வாந்தி, சலம் சலமாக பேதி, தோல் கனத்தல், தால்பிடிப்பு, வாயில்நீர் உமிழ்தல், கையில் நாடிகள் விரைவில் அடங்குதல், குரக்குவலி வலித்தல், நடை கெடல் புரளல், மேல் நோக்கிய பார்வை என்னும் குணங்கள் உடையது.
அசீரண ரோக பேதம் –
        அஜிரனரோகம், வாத பித்த கபம்ங் களினால் முறையே, ஆமாசீறன, விதக்தாசீரணம், விஷ்டம்பாசீரணம், விளம்பிகாசீரணம், ரசசேஷசீரணம், உற்சகாசீரணம் என ஆறுவகைப்படும்.
ஆமாசீரனரோகலட்சனம் –
        கண்களில் தாடைகளிலும் அதைப்பு, சாப்பிடாத காலத்தும்  சாப்பிட்டது போல் ஏப்பம் வாயில் நீர் ஊரல், வயிற்றில் சங்கடம், சரீரத்தில் வேதனை யோடு கனத்தல் என்னும் குணங்களுடையது. இதற்கு சிலேத்தும அசீரனரோகம் என்னுங் குணங்களுடையது. இதற்கு சிலேத்தும சீரரோகம் என்று பேர்
விதக்த்தா சீரனரோக லட்சணம் –
        சரீரத்தில் சுடுகி தாகம் சோருதல், பிரமை, புலி ஏப்பம், என்னுங் குணங்களுடையது.( விதக்தம் – என்பது – காங்கை ) இதற்கு பித்த சீரான ரோகம் என்பதும்.
விஷ்டம்பா சீரான ரோகலட்சனம் –
சூலை, மலபந்தம் வயிறு உப்பிசம், மந்தாகினி, சரீரம் இளைத்தல், என்னுங் குணங்கள் உடையது. இதற்கு வாத அசீரனரோகம் மெனவும் ஒரு பேருண்டு ( விஷ்டகம் – என்பது ஸ்தம்பித்தல் )
விளம்பிகா சீரனரோக லட்சணம் –
        கிணற்றில் போட்டகல் போல் வயிற்றில் அடங்கி கனத்து நாட்பட இருக்கும். இது கபவாதத்தால் பிறந்தது. ( விளம்பிகம் – என்பது கால தாமதம் )
ரசசேஷா சீரனரோக லட்சணம் ---
        சுபாவ எப்பாம், மார்பிலும் தலையிலும் பொறுக்கக் கூடாத நோவு என்னுங் குணங்களுடையது.
உற்சாக சீரனரோக லட்சணம் –
        அறுசுவையுடன் ஒருவன் புசிக்க, அதில் இச்சைப் பட்டு ஏக்க முற்றவர்களுக்கு. முன்பு வழக்கமான போசனம் அசீரனப்பட்டு வெகு நேரம் பொருத்தும், சீரணிக்காமல் எலும்பைப் போலவே கிடைக்கும். அப்போது புளி ஏப்பம், வயிற்றில் இரைச்சல் பொருமல், விருத்தல், நோவுடன் அநேக உபத்திரமான விகாரம் என்னும் குணங்களை உண்டாக்கும், இது கஷ்ட சாத்தியம்.
சாமானியா சீரனரோகம் –
        மலபந்தம் அல்லது ஆயாசம், அபானவாயு, இன்மை வயிறு பொருமல், தேக கனதி, பிரமை என்னுங் குணங்கள் அசீரண ரோகத்திற்கு பொதுவாக இருக்கும்.
( சில வட மொழி மருத்துவம் நூல்களில் ) துமாசீரணம், விதுமா சீரணம், விஷ்பஷ்டம்ப சீரணம், ரச சோசசீரணம் என நான்கு வகைப்படும்.
துமா சீரான ரோகம் –
        அசீரனத்தோடு, சுபாவ ஏப்பம், உண்டவஸ்த்துக்கள் தங்காமல் அடிக்கடி வாந்தி, புளி ஏப்பம், உதடும் நாவும் வரளல், சரீர முழுவதும் எரிச்சல், அல்லித் தண்டை ஒத்த குளிர்ச்சி, ஒருவேளை கண்டத்தில் வியர்வை சரீரம் வாடல் என்னுங் குணங்களுடையது.
விதுமாசீரனரோகம் –
        அஜீரணத் தோடு  புளி ஏப்பம் புசித்த அன்னம் வாந்தி, வயிறு உப்பலோடு பேதி, ஒரு வேலை இரைச்சலுடன் புளிப்பான பேதி முகங்கருத்தல், தேகம் வாடல், மயக்கம் முன்பின் தோற்றாமை, மிகு வேதனை, இடை பொருந்தாமை அதி தாகம் என்னும் குணங்கள் உடையது.
விஷ்பஷ்டம் பா சீரனரோகம் –
        அசீரனத்தோடு சரீர மெல்லாம் மிகு வேதனை, அதி சயித்தியம், கோழை, சரீரமும் கண்ணும் வெளிறல், வெளுத்த வாந்தி பொய்ப்பசி, அடிக்கடி நுரை நுரையாக பேதி, இருமல், சுவாசம், துயரம், தலை புரட்டல், வயித்தியத்திற்கு வசப்படாமை என்னுங் குணங்களுடையது.
ரசசேஷா சீரான ரோகம் ---
        முன்பு கூறிய ரசசேஷச சீரான ரோக குணங்கள் தான் அசீரண பேதங்கள் மேற்கூறி இருப்பதுடன். சரகம், தன்வந்திரி முதலிய நூல்களில் வாத அசீரணம், பித்த அசீரணம், சிலேத்தும அசீரணம் என்று மூன்று பேதங்கள் அதிகமாக சொல்லப் பட்டு இருக்கிறது. அவையாவன –
வாத அசீரண ரோகம் –
        மலபந்தம் வாந்தி, பிரமை முகத்திலும் மார்பிலும் துர்கந்தம் வீசுதல் சோகை தாகம் பீடை என்னும் குணங்கள் உடையது.
பித்த அசீரனரோகம் ---
        பேதி வயிற்றில் நோவு, அடிக்கடி வாந்தியாகுதல், கால் கைகளில் சங்கோசம் என்னுங் குணங்கள் உடையது.  
சிலேச்மா சீரனரோகம் ---
        வாந்தி பிரமை, முகத்தில் வியர்வை, மறத்தல், சீதளம், தேகம் மரம் போல் விரைத்தல்
அசீரண உபவத்திரங்கள் –
        மூர்ச்சை அதிக வார்த்தை ஒக்காளம்,வாய் நீருரல், தேக சைதில்லியம், ஆயாசம், இரைச்சல் உண்டாயிருக்கும். நோய் அதிகரித்தல் மரணம் உண்டாகும்
அஜீரணத்துக்கு முக்கியகாரனங்கள் –
        அறிவில்லாமல் ஆசையால் அதிகமாய் போஜன பலகாரங்கள் புசிப்பதினால் அசீரண ரோகம் உண்டாகும். இந்த அசீரனத்தால் சகல நோய்களுக்கு முக்கிய காரணம் என்று அறியவும்.
---- அனுபவவைத்திய தேவரகசியம் ---
என்னும் மருத்துவ நூலின் முதற்காண்டம் தாகரோகாதிகள்
நான்காவது வர்க்கம் சம்பூரணம்
************************
அனுபவவைத்திய தேவரகசியம் முதற்காண்டாம் ஐந்தாவது வர்க்கம் ஆரம்பம் -----
மூத்திர காத ரோகங்கள் –
        மூத்திர காத ரோகமானது கிரிச்சுர ரோகம், அஷ்மரிரோகம் மூத்திர தோஷ ரோகம் என மூன்று விதங்கள் உள்ளது.
கிரிச்சர ரோகம் –
        கிரிச்சுர ரோகம் என்பது வருத்தத்துடன் கொஞ்சங் கொஞ்சமாக மூத்திரத்தை விழச் செய்வது கிரிச்சுர ரோகம் என்று பேர். இதனை சொட்டு மூத்திரம் என வழங்குகிறார்கள்.
வாத கிரிச்சுர ரோகம் –
        கீல்வயிர்ரிலும் தொடைக்கவுட்டியிலும் ஆண்குறியிலும், நோவை உண்டாக்கி கொஞ்சங் கொஞ்சமாக நேர் இறங்கச் செய்தல் என்னுங் குணங்கள் உடையது.
பித்த கிரிச்சரம் ரோகம் –
        நீர்த்துவாரத்தில் நோவையும் எரிச்சலையும் உண்டாக்கி மஞ்சள், சிகப்பு நிறங்களாக நேரை இறங்கச் செய்தல் என்னும் குங்கள் உடையது.
சிலேத்தும கிரிச்சரம் ரோகம் –
        அடிவயிற்றிலும், ஆண்குறியிலும் வீக்கத்தை உண்டாக்கி பிசினைப் போல் வழுவழுத்து கட்டுபட்டதான நீர் இரங்கல் என்னுஞ குணங்களுடையது.
திரி தோஷ கிரிச்சர ரோகம் –
        மேற்கூறிய மூன்றுவித தோஷங்களின் குணத்தையும் ஏககாலத்தில் உடையது. இது அசாத்தியம்.
அஸ்மரிரோகம் –
        கீழ் வயிற்றில் உப்பிசம், நாபியின் நாலு பக்கங்களிலும் நோவு, நேரானது ஆட்டு மூத்திர வாசனையுடன் வருத்தத்துடன் இரங்கல் சுரம் அரோசகம் என்னுங் குணங்கள் உடையது. இதற்கு நீரடைப்பு என்றும் சொல்லுவார்கள்.
பேதங்களாவன –
        உள்புறமாக மூத்திரம் உலர்கிரதால் அஷ்மரிரோகம் உண்டாகும்.
வாதாஸ்மரிரோகம் –
        நீரிறங்கும் போது வருத்ததுடன் பற்கடித்தல், நடுக்கல், ஆண்குறியை கையால் தேய்த்தல், தொப்புளை பிசைதல், சதா அழுதல், சத்தத்துடன் மலம் நழுகல் மூத்திரம் துளி துளியாக கருத்த நிறத்துடன் விழுதல் என்னுங் குணங்கள் உடையது.
சிலேத்துமாஸ் மரீரோகம் ---
        கீழ் வயிற்றில் அதிக நோவு கனத்தல் தேன் நிறமாகவும், வெண்மையாகவும் நீர் இரங்கல் என்னுங் குணங்கள் உடையது.
சுக்கிலாஸ்மரீரோகம் –
        பீஜத்தில் வீக்கம், கீழ் வயிற்றில் நோவு நீரானது வெகுநேரம் பொறுத்து இரங்கல் என்னுங் குணங்கள் உடையது. சுக்கிலஸ்மரிரோகத்தில் உலரப்பட்டு இருந்து விந்து வானத்து வாயுவினால் மணல், சிறுபயறு, கடலை, சுண்டக்காய், பேரீச்சங்காய் பிரமாணங்களை ஒத்த கல்லுகளாக திரட்டி நீரோடு சேர்த்து நாளத்தின் வழியாகப் வெளியே தள்ளும். வாயு சுபாவ வழியில் நடந்தால் நீருடன் கல்லுகள் விழுந்து கொண்டே இருக்கும். வாயுதப்பி நடந்தால் பக்கநோவு உண்டாகும். இதற்கு கல்லடைப்பு ரோகம் அல்லது சர்க்கரா அஷ்மரி ரோகம் என்றுபேர்.
மூத்திர தோஷம் –
         1 – வது வாத வாஸ்த்தி மூத்திர ரோகமானது மூத்திர சங்க வாத வாஸ்திரோக மொன்றும், மூத்திர பிந்துவாத வஸ்த்திரோகம் என்றும் பேர் இருவகைப்படும்.
சங்கவாத வஸ்திரோகம் – வாயுவானது கீழ் வயிற்று முகத்தை அடைத்து நீரை உள்ளில் சேர்த்து கட்டப் படுவதால் நோவு நமைச்சல் என்னுங் குணங்களுடையது.
பிந்து வாத வஸ்திரோகம் –
        மூத்திரம் துளி துளியாக விழுதல் இதை மூத்திர பிந்து வாத வஸ்த்தி ரோகம் என்று பேர். இது தவிர குண்டலி மூத்திர ரோகம், வாதாஷதீல் மூத்திரோகம். மூத்திரா தீதரோகம், மூத்திரஜடரோகம் மூத்திரோச் சங்க ரோகம், மூத்திராகிரந்தி ரோகம், மூத்திர சுக்கில ரோகம்,விட்விகாத மூத்திர ரோகம் உஷ்ண வாத மூத்திர ரோகம், மூத்திரஷய ரோகம்,மூத்திர சாதா ரோகம் என்று பலவித பேதங்களும் உண்டு.
எந்த அச்மரீ ராகத்தில் பீஜங்களில் நோவும்,நீர்க்கட்டும் இருக்கிறதோ அந்தரோகம் அசாத்தியம் என்று அறிக.
                                       *************
மேக ரோக பேதம் –
        மதுமேக மச்ச மேகம், வாசாமேகம், அஸ்திமேகம், என நான்கும் வாதத்தினால் உண்டாகும் மஞ்சிஷ்டிமேகம், சாரமேகம், அரித்திரா மேகம் நீல மேகம், ரத்த மேகம், காளமேகம் என்னும் இவ்வாறு பித்தத்தினால் பிறக்கும், பீஷ்ட மேகம், இட்சு மேகம், சந்திரமேகம், சிக்தா மேகம், லாலா மேகம், சீதமேகம், சனைர்மேகம், சுராமேகம், சுக்கில மேகம், சலமேகம் என்னும் பத்தும் கபத்தினால் உண்டாகும், இவைகளில் வேதனைப்போல் நிறத்தைப் பெற்று எறும்புகள் மொய்க்கிற மேக மூத்திர ரோகங்களுக்கு தகுந்த சிகிச்சை உடனே செய்தல் வேண்டும்.
மேக ரோக லட்சணம் ---
        சரீரத்தில் வியர்வை, துர்கந்தம் தளர்ச்சி,கனத்தல்,மார்புகள் நாவு, காத்து இவ்விடங்களில் எரிச்சல், தலை மயிரும், நகமும், விரைவில் வளரல், கன்னமும், நெஞ்சும் உலறல், தாகம், வாயினிப்பு, கைகால் எரிச்சல் ஆண்குறி சுருங்கல், சுக்கில நாசம் என்னுங் குணங்கள் உடையது. 

No comments:

Post a Comment